அபிநந்தனுக்கு பகவான் மகாவீர் அஹிம்சா விருது! மகாவீர் ஜயந்தி அன்று வழங்குகிறது!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

Abhinandan Varthaman to get Bhagwan Mahavir Ahimsa Puraskar - 2026

அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகள் கொண்டது. சமூகப் பணிகளிலும் தொண்டுக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதினை, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மகாவீர் ஜெயந்தி தினத்தன்று (ஏப்.17) வழங்க தீர்மானித்துள்ளது.

பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது என்ற பெயரில் அபிநந்தனுக்கு இந்த ஆண்டு வழங்கப்படும் என அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதியின் மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விருதைப் பெறுபவருக்கு சாதனைப் பட்டயத்துடன் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப் படும். இந்த ஆண்டு, அபிநந்தன் இதனைப் பெறுகிறார்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.