இரு நாட்கள் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

Regional Meteorological Center 1 1 - 2026

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 30, மே 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னா் புயலாக வலுப்பெற்று தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிகழம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வரும் ஏப்.30, மே 1 ஆகிய தேதிகளில் தமிழகம், மற்றும் புதுவையில் குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த இரு தினங்களிலும் தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது தமிழகத்தில் 115 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.