புதுதில்லி: சுமார் 2 மாத கால மிக நீண்ட ஓய்வுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தில்லிக்குத் திரும்புகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க இளைஞர் காங்கிரஸார் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ராகுல் விடுப்பு எடுத்துச் சென்றது கட்சியினர் மட்டுமல்லாது, பொது மக்கள் மத்தியிலும் பல்வேறு ஊகங்களைக் கிளப்பின. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியால் ராகுல் மிகவும் அதிருப்தியும் விரக்தியும் அடைந்தார் என்றும், காங்கிரசுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கவும், அதை செயல்படுத்தவும் ராகுல் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யப்போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் கட்சியில் விடுப்பு எடுத்துக் கொண்டு ராகுல் திடீரென காணாமல் போனார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கலந்து கொள்ளாமல் சென்றதால், அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார்… என்பது பற்றியெல்லாம் பல்வேறு ஊகங்கள் உலவின. இடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றப்பட்டதில், சோனியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளிநாடு சென்றதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் ஒரு பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும், குளியல் அறையில் வழுக்கி விழுந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூட செய்திகள் உலவின. ஒவ்வொரு முறையும் அவர் இன்று திரும்புவார், நாளை திரும்புவார் என்று கூறப்பட்டு, அது பொய்யாகி, இதனால் ராகுலை யாரும் கண்டு கொள்ளாத நிலை உருவானது. இந்நிலையில், தில்லியில் வரும் 19 ஆம் தேதி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்தும் விவசாயிகள் பேரணியில் ராகுல் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்தனர். இதனை காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி உறுதி செய்தார். இதன் மூலம் ராகுல்காந்தி இந்த வாரம் தில்லிக்குத் திரும்புவது உறுதியானது. இந்நிலையில் அவர் இன்று தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது. இன்று தில்லி திரும்பும் ராகுலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க தயாராகி வருகிறார்கள்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
மதுரை
எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.
ஆன்மிகச் செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
RSS condemns Ram temple donation theft, urging strict action and patience from the community during this challenging time.