இளையராஜா- எஸ்பிபி விவகாரம்: சுமுகமாகத் தீர்க்க வெங்கய்ய நாயுடு யோசனை

Published:

எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சுமுகமான முறையில் தீர்க்கப்படவேண்டும் என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
திரையிசை வாழ்க்கையில்,  50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ட்விட்டரில் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்த விவகாரம் நல்லவிதமாகச் சரிசெய்யப்பட வேண்டும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img