சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி பாலியல் வன்கொடுமை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vankodumai 1 1

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் மற்றொரு துணிக்கடையில் பணிபுரியும் யுவராஜ் என்ற இளைஞர் சிறுமியை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்துள்ளார்.

சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்த யுவராஜ் அவ்வப்போது காதலை கூறியதாக கூறப்படுகிறது. எனினும் அதனை ஏற்க அச்சிறுமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகரில் இளைஞர் யுவராஜ் உடன் சிறுமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி யுவராஜ் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் கிளை சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.