ஏப்ரல் 21, 2021, 7:18 மணி புதன்கிழமை
More

  செப்.7 முதல் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி; மத்திய அரசின் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்!

  இருப்பினும் இந்த ஊரடங்கின் போது நான்காம் கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  lockdown
  lockdown

  செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கின் போது நான்காம் கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  செப்டம்பர் 30 வரை அமலில் உள்ள ஊரடங்கின் போது மெட்ரோ ரயில்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது 

  செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது மேலும் செப்டம்பர் 21 முதல் 100 பேரை கொண்டு கலாச்சார, பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம் 

  செப்டம்பர் 21 முதல் 100 பேருடன் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தலாம். திறந்தவெளி அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

  கல்வி நிலையங்களில் 50 சதவீத ஆசிரியர்களை வரவழைத்து ஆன்லைன் வழியில் பாடம் நடத்தலாம் . 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப் படுகிறது.

  கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத பகுதிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப் படும். 

  அதே நேரம், செப்டம்பர் 30ஆம் தேதி  வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் ! திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செப்டம்பர் மாதத்திலும் மூடப்பட்டிருக்கும்!

  மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.  மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது என்றும், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் உள்ளூர் ஊரடங்குகளை பிறப்பிக்க கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. 

  அதே போல், போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்றும் தெளிவாக்கியிருக்கிறது. 

  • UNLOCK-4.0 :
  • செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ இரயில்கள் இயங்க அனுமதி.
  • அரசியல், கலை, விளையாட்டு நிகழ்வுகளை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 100 பேர்களுடன் நடத்தலாம்.
  • செப்டம்பர் 30-ஆம்  தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.
  • திறந்தவெளி திரை அரங்குகள் 21 ம் தேதி முதல் செயல்பட அனுமதி.
  • மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள் சென்றுவர முழு அனுமதி உண்டு. இ-பாஸ் மாதிரியான சிறப்பு அனுமதி தேவையில்லை.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் லாக்-டவுன் அமல்படுத்த மாநிலங்களுக்கு உரிமை இல்லை.
  • அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »