Homeஇந்தியாஆண்டுக்கணக்கில் பாலியல் கொடுமை; 143 பேர் மீது 100 பக்க புகார் அளித்த 25 வயது...

ஆண்டுக்கணக்கில் பாலியல் கொடுமை; 143 பேர் மீது 100 பக்க புகார் அளித்த 25 வயது பெண்!

girl attack image
girl attack image
- Advertisement -
- Advertisement -

143 பேர் மீது 100 பக்கங்கள் புகார் அளித்த 25 வயது இளம்பெண்.

ஆண்டுக்கணக்காக பாலியல் தாக்குதல் செய்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பஞ்சகுட்டா போலீசாரிடம் புகார்.

11 ஆண்டுகளாக கூட்டாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்கள். கர்ப்பம் தரித்த போது அபார்ஷன் செய்வித்தார்கள். நிர்வாணமாக போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்தார்கள். சிகரெட்டால் உடலெங்கும் சுட்டார்கள். பல விதத்திலும் துன்புறுத்தினார்கள். யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவதாக துப்பாக்கியால் மிரட்டினார்கள்.

அவர்களில் மாணவர் சங்க தலைவர்கள், அரசியல் தலைவர்களின் பிஏ பெயர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலரும் உள்ளார்கள். இப்போது அவர்களிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று ஒரு இளம் பெண் பஞ்சகுட்டா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நூறு பக்கங்கள் கொண்ட புகாரில் அவர் பல விஷயங்களை கூறியுள்ளார்.

தன் மீது கூட்டு பாலியல் வன்முறை செய்ததாகவும் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திர பிரதேசம் தெலங்காணா போன்ற பல மாநிலங்களுக்கும் பல இடங்களுக்கும் தன்னை அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் தன்னை விட்டுவிட மாட்டார்கள் என்றும் இதே தன் இறுதி வாக்குமூலம் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த இளம்பெண்ணின் புகாரின்படி போலீசார் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 143 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளார்கள்.

குற்றவாளிகளில் ஒரு முன்னாள் எம்பியின் பிஏ கூட உள்ளார். புகாரில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி நல்கொணடா மாவட்டத்தைச் சேர்ந்த பதினைந்து வயது இளம்பெண்ணுக்கு மிரியால்குடாவைச் சேர்ந்த ஒருவரோடு 2009 ஜூனில் திருமணம் ஆனது. புகுந்த வீட்டில் அவர்கள் கொடுத்த தொல்லைகளை தாங்க முடியாமல் 2010 டிசம்பரிலேயே பெரியவர்களின் முன்னிலையில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

பிறந்த வீட்டுக்கு வந்து மீண்டும் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது மாணவர் சங்கத் தலைவர்களோடு தொடர்பு ஏற்பட்டது.

சில ஆண்டுகள் முன்பு ஹைதராபாத் ராஜ் பவன் வீதியிலுள்ள அப்பார்ட்மெண்டில் குடிபுகுந்தார். அப்போதிலிருந்து தன் மீது முன்னாள் எம்பியின் பிஏ மற்றும் மாணவர் சங்கத் தலைவர்கள் 3 பேர் மற்றும் 139 பேர் பல ஆண்டுகளாக 5000 முறை பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தன் சாதியைக் குறிப்பிட்டு அவதூறு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு மேலும் சில பெண்கள் மேல் கூட அவர்கள் பாலியல் வன்முறை நடத்தியதாக அதில் கூறியுள்ளார்.

தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் வேண்டிக் கொண்டார்.

அவருடைய புகாரின்படி எஸ்சி எஸ்டி அட்ராசிட்டி சட்டப் பிரிவோடு கூட பலவித பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் ரெட்டி தெரிவித்தார்.

வழக்கின் தீவிரத்தை முன்னிட்டு வழக்கு விசாரணையை சிசிஎஸ் அல்லது சிஐடி யிடம் ஒப்படைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினார்.

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,939FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Cinema / Entertainment

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

கிளைமேக்ஸை மாத்த சொன்ன விஜய்.. ஹீரோவை மாத்தி ஹிட் கொடுத்த டைரக்டர்!

விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய படங்கள் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.அப்பொழுது...

Ak கேட்டு ஓகே ஆனாராம் இவர்..! 61 அப்டேட்!

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார்....

சங்கராந்தி வாழ்த்துக் கூறிய பிரபல நடிகர்! குடும்பத்துடன் புகைப்படம் வைரல்!

நடிகர் விஜய் தேவர கொண்டாவின் சங்கராந்தி தின புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. நடிகர் விஜய்...

Latest News : Read Now...