டாஸ்மாக் அவலம்: குடிபோதையில் நடந்த தகராறு! கல்லால் அடித்து கொலை!

சற்றுமுன் தமிழகம்
murder-2-1

குடித்துவிட்டு போதையில் தகராறு செய்த நபரை மற்றொரு நபர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த நமசிவாயராஜ் (55) என்பவர் பாளையங்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக்கில் குடித்துள்ளார். அதன்பிறகு போதையில், ராஜாஜி பூங்கா அருகே, மணிநகரை சேர்ந்த சந்திரபோஸ் (44) என்பவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரபோஸ் அருகில் கிடந்த கல்லை எடுத்து நமசிவாயராஜை தாக்கினார். அதில் நிலைகுலைந்துபோன அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த , தென்பாகம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த , வேல்முருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் , வழக்குப்பதிவு செய்த போலீசார் , சந்திரபோஸை கைது செய்தனர் . மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.