modi pongal greetings - 2026

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து!

சற்றுமுன் Featured இந்தியா
modi pongal greetings - 2026

பாரத பிரதமர் நரேந்திர மோதி உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட தேசிய தலைவர்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்… என்று தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்… என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா தமது வாழ்த்துச் செய்தியில் பொங்கல் திருநாளில் தமிழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்… என்று குறிப்பிட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.