December 8, 2025, 4:19 AM
22.9 C
Chennai

கயிற்றின் மீது ஹை ஹீல்ஸ் உடன்.. பெண் உலக சாதனை!

lady 2 - 2025

கின்னஸ் வேல்ட் ரெக்கார்டு இன்ஸ்டாகிராம் பக்கம் சாதனையாளர்களின் வீடியோவால் நிரம்பி வழிகிறது.

அதில் பல வீடியோக்கள் நம்மை திகைக்க வைத்தாலும், சில மட்டுமே இது எப்படி சாத்தியமானது என ஆச்சர்யத்தில் நம்மை உறைய வைக்கிறது. அப்படிப்பட்ட கிக்கேற்றும் வீடியோக்களுக்கு எப்போதுமே கின்னஸ் சாதனை புத்தகத்தின் யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கிறது.

சில மணி நேரத்திற்கு முன்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட பெண் ஒருவரின் சாதனை வீடியோ வைரலாகி வருவதோடு, பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கடற்கரையான சாண்டா மோனிகா பீச்சில் ஒல்கா ஹென்றி என்ற இளம் பெண் நிகழ்த்திய சாதனை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சாண்டா மோனிகா கடற்கரையின் மணப்பரப்பிற்கு மேலாக இருபுற பார்களுக்கும் நடுவே ஒரு நீண்ட கயிறு கட்டப்பட்டுள்ளது. அதை லவகமாக கடந்ததற்காக ஒல்கா ஹென்றி என்ற பெண் சாதனையாளர்களின் புத்தகமான கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக ஒல்கா செய்த விஷயம்…

அந்த வீடியோவில், இரண்டு கால்களிலும் ஹை ஹில்ஸ் அணிந்திருக்கும் ஒல்கா, எந்த வித பிடிப்பும் இல்லாமல் கயிற்றின் மீது ஏறி நிற்கிறார். பின்னர் கயிற்றின் மீது ஒற்றை காலை நீட்டி வைத்து, எகிறி குதிக்கிறார். மீண்டும் சரியாக கயிற்றின் மீது வந்து இரண்டு கால்களையும் ஹைஹீல்ஸ் உடன் பேலன்ஸ் செய்து நிற்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஒல்கா ஹென்றியின் வீடியோவை பார்க்கும் போது நமது கண்களை நம்மால் கூட நம்ப முடியவில்லை. இது உண்மை தானா? இல்லை ரிப்பீட்டு மோடில் வீடியோ ப்ளே ஆகிறதா? என சந்தேகம் எழும் அளவிற்கு ஒல்கா வேகமாக செயல்படுகிறார்.

அந்த அளவிற்கு கொஞ்சம் கூட நிலை தடுமாறாமல் செய்திருக்கிறார். இப்படி ஒரு நிமிடத்திற்குள் 25 முறைகள் எகிறி குதித்த ஒல்கா ஹென்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த வீடியோவை பதிவேற்றிய 10 மணி நேரத்திற்குள்ளாகவே 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு வியந்துள்ளனர். ஒல்காவின் இந்த அற்புதமான திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படியொரு சாதனையை படைப்பது சாதாரணமானது அல்ல, நிறைய பயிற்சியும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சாதாரணமாகவே கயிற்றின் மீது நடப்பது கடினம், அதிலும் ஹைஹீல்ஸ் அணிந்து கொண்டு இதை செய்வது என்பது அசாத்தியமானது என பலரும் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories