கிரிவல நகரில் வலம் வரப்போகும் நகராட்சி முதல் பெண் தலைவி யார் ?

Published:

thiruvannamalai local body - 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது.

4 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 10 பேரூராட்சி அலுவலகங்களில் விழா நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உறுதிமொழியை ஏற்று உறுப்பினர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் பதவியேற்றனர்.

திருவண்ணாமலை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

போளூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தல் அலுவலர் முகமது ரிஜ்வான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

சேத்துப்பட்டு பேரூராட்சி 18 வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திர பாபு தலைமையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்கள்..

*- திருவண்ணாமலை பாலா

Related articles

Recent articles

spot_img