இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செக் குடியரசைச் சேர்ந்த கரோலினா லிஸ்கோவா ((Karolina Pliskova)), கிரீஸின் மரியா சக்காரியை ((Maria Sakkari)) எதிர்த்து விளையாடினார்.
அப்போது கரோலினா எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தார். இதனால் கோபமடைந்த அவர், தனது டென்னிஸ் மட்டையால் நடுவரின் இருக்கையில் சரமாரியாக அடித்தார்.
இந்தச் சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கரோலினாவுக்கு சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கவோ, அல்லது அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.