எஸ்ஐ., தேர்வில் பிட் அடித்து மாட்டிக் கொண்ட போலீஸ்காரர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
tamilnadu police - 2026

விழுப்புரத்தில் நடந்த எஸ்ஐ பதவிக்கான எழுத்துத் தேர்வில் பிட் அடித்த போலீஸ்காரர் சிக்கினார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ் ஐ பதவிக்கு காவல்துறையினருக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

விழுப்புரம் தனியார் கல்லூரியில் நடந்த தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 810 போலீசார் பங்கேற்றனர். கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் தேர்வை கண்காணித்தனர். தேர்வு மையத்தின் ஓர் அறையில் டிஎஸ்பி ரவீந்திரன் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார்

அப்போது அனந்தபுரம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் மணி என்பவர் பிட் அடித்தது தெரியவந்தது. மணியை சோதனை செய்தபோது சட்டம் குறித்த விடைகள் தொடர்பான 4 பக்கம் ஜெராக்ஸ் வைத்திருந்தார்

இதைக் கண்டறிந்த கண்காணிப்பாளர்கள் அவரை உடனடியாக தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினர்.

இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் தேர்வு எழுத முடியாது; மேலும் மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ் பி ஜெயக்குமார் தெரிவித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.