சென்னை: இந்துக் கடவுள்களையும் கோயில்களையும் சாத்தான்கள் என்று கூறி மதக் கலவரம் ஏற்படுத்த முனையும் கிறிஸ்துவ மத போதகர் மோகன்.சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.
வியாழன் மதியம் 12 மணி அளவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் DC நிஷா அவர்களிடம் இந்துக் கோயில்கள் எல்லாம் சாத்தான் குடி கொள்ளும் இடம் என்று பேசியும் மத உணர்வுகளை கொச்சைபடுத்தியும் , இந்து உணர்வு கொண்ட இறைநம்பிக்கையாளர்கள் மனம் வேதனையடைய செய்து ,மத மோதல் உண்டாக்கும் வகையில் பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திட வேண்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோரிக்கை புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் இராம ரவிக்குமார் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் என் ஆர் பரணிதரன் இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சந்துரு என்ற சீனிவாசன் இந்து மக்கள் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் திரு T பரமானந்தம் திருச்சி மாநகர தலைவர் சங்கர் தர்மராஜ் மாவட்ட செய்தி தொடர்பாளர் சண்முகம் திருச்சி மாவட்ட அமைப்பாளர் முருகன் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் கௌரவத் தலைவர் காவேரி ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த புகார் அளித்தனர்.




