ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் காவடி எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட தீபா பேரவை மாவட்ட செயலாளர் தொண்டன் சுப்பிரமணி கூறியபோது… ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள போராட்ட மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி அன்று ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு கடந்த 1 ஆம் தேதி மாவட்ட காவல் துறையிடம் விண்ணப்பித்து இருந்தேன். இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை.
இதனுடைய மனுவின் நகலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளரிடம் அனுப்பியிருந்தும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. காவல்துறை அனுமதி இன்றி நான் போராட்டத்தில் இறங்கி கலவரம் ஏற்பட்டு பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் காந்திய வழியில் ஜனநாயக நாட்டில் மீண்டும் மீண்டும் தங்களிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தூத்துக்குடி மக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுத்து அறிவித்திடக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரி காவடி எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றார்.
இந்த திடீர் சலசலப்பால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் தனசேகரன் மாவட்ட துணைச் செயலாளர் மணி மாவட்ட அமைப்பாளர் பால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.