தாய்க் கழகத்துக்கு தாவிய டிடிவி தினகரன் கட்சியின் இன்னொரு பிரபலம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

sasirekha admk - 2026

அமமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா பல்வேறு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசி அக்கட்சியினர் மத்தியில் பிரபலமானார். மேலும் வழக்கறிஞரான இவர் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்.

அவர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார். இது அமமுகவினருக்கும் தினகரனுக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.

இது குறித்து இன்று காலையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுவிட்டது. அமமுக.,வில் இருந்து திமுக.,வுக்கு தாவிய தங்க தமிழ்ச்செல்வன் குறித்த பரபரப்பு சூடுபிடித்த போது, அமமுக.,வில் இருந்து தாய்க் கழகமான அதிமுக.,வுக்கு இவர் தாவியுள்ளார்.

 

1 thought on “தாய்க் கழகத்துக்கு தாவிய டிடிவி தினகரன் கட்சியின் இன்னொரு பிரபலம்!”

  1. தினகரன் கட்சியிலிருந்து, அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராயிருந்த சசிரேகா அ.தி.மு.க.வில் ஐக்கியமான செய்தி ஸ்டாலினுக்கு தெரியுமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.