spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

உறவுகள் ஒரு தொடர்கதை!

- Advertisement -

இந்தத் தலைமுறையில் பெரும்பாலும் தாத்தா பாட்டி வரை பலரும் பார்த்திருப்போம். அதாவது நமக்கு முந்தைய இரு தலைமுறை வரை. மூன்று தலைமுறை பின்நோக்கி யோசித்தால்…?

கூட்டுக் குடும்பங்களில் சிறார்கள் பாட்டி, பூட்டி வரை பார்த்திருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு வாய்ப்பு கிடைக்காத நிலையில்..? சரி நாமே தேடிப் போவோமே என்று திடீர் ஆசை !

முதலில் அப்பா, பெரியப்பா முன் அமர்ந்து, அவர்களின் அப்பா, அப்பா வழித் தாத்தா… அம்மா, அம்மா வழி தாத்தா இவர்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் பழக்க வழக்கம், எங்கே எப்படி இருந்தார்கள்? அந்த கால சூழ்நிலை, சிறுவயது அனுபவங்கள்… இப்படி!

என் பெரியப்பாவுக்கு படு உற்சாகம்! அவருக்கு வயது 75 கடந்து விட்டது. நெல்லை மாவட்ட வீரகேரளம்புதூரில் பிறந்தவர். அவருடைய அப்பாவின் (அதாவது என் தாத்தாவின்) பூர்வீகம் எது, எங்கே இருந்தார் என்றெல்லாம் கேட்டேன்.

நெல்லை ஜில்லா சேந்தமரம்தான் அவர் இருந்த இடம் என்று அவரின் சிறுவயது நினைவுகளை அசைபோட்டார். (நான் என் தாத்தா ராம ஐயங்காரைப் பார்த்ததில்லை. என் தந்தையாரின் திருமணத்துக்கு முன்பே அவர் காலமாகிவிட்டிருந்தார்.)

ஒரு சில சம்பவங்களைத் தவிர பெரிதாக அவர் நினைவில் சொல்லும்படியாக ஏதும் இல்லை.

சரி பெரியப்பா.. பாட்டி பூர்வீகம் பத்தி சொல்லுங்க… என்று இழுத்தேன்.

குப்பு ஜானகி என்ற பேர். நினைவு தெரிந்து எனக்கு 8 வயது இருந்தபோது அவர் காலமாகிவிட்டார். அவர் முகம் நினைவில் உள்ளது என்றாலும், பின்னணி தெரிந்து கொள்ள ஆசை எனக்கு. பெரியப்பாவிடம் தோண்டித் துருவினேன்…

தேனி-க்கு அருகே 4 கி.மீட்டரில் உள்ள பூதிப்புரம். அதுதான் பாட்டியின் பூர்வீகம். அவரின் தந்தையார்… (என் அப்பாவின் தாத்தா) அனந்தகிருஷ்ண ஐயங்கார். அங்கே சித்த மருத்துவத்தில் கைதேர்ந்த வைத்தியராக இருந்துள்ளார். அவரின் ஒரே பெண்ணான என் பாட்டிக்கு திருமணமாகி நெல்லை ஜில்லாவுக்கு வந்த பின்னர், தேனி (பூர்வீகத்துடனான) தொடர்பு அவருக்கு முற்றிலும் போய்விட்டதாம். 
உடனே என் பத்திரிகை வட்ட தேனி நண்பர்களிடம் விசாரித்தேன். ஊர் குறித்த தகவல் எல்லாம் கிடைத்தது.

இப்போது எனக்குள் ஓர் ஆசை. தேனி- பூதிப்புரத்துக்குச் சென்று வர வேண்டும். அங்கே அக்ரஹாரம் ஏதும் உண்டா? இப்போது இருந்தால் எப்படி உள்ளது? சுமார் 100 வருடம் முன்னர் பாட்டியின் அப்பா வைத்தியர் அனந்தகிருஷ்ண ஐயங்கார் எப்படி இருந்தார்… இப்போதும் அவரை அங்கே நினைவு கொண்டிருப்பவர்கள் யாரும் உண்டா? நாட்களை எதிர்பார்த்துள்ளேன்.

இந்தப் படத்தில் நடுவில் இருப்பவர் என் பாட்டி குப்பு ஜானகி. இடதுபுறம் இருப்பவர் அவர் மகளும் என் அத்தையுமான ருக்மிணி. வலப்புறம் இருப்பவர் என் அத்தையின் மகளும் என் சிற்றப்பாவின் மனைவியுமான மைதிலி…

ஓர் ஆச்சரியம்… எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக (ஒன்றுவிட்ட சித்தப்பா, பெரியப்பா, அத்தை என யார் இருந்தாலும்….) ஒவ்வொருவருக்கும் ஒரு பெண் குழந்தை என்பதே!
பின்குறிப்பு:

இது ஏதோ சுயபுராணம் என்று நட்பு வட்டம் எண்ணக் கூடாது. முன்னோர் வாழ்ந்த மண்ணையும் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்வதிலும், பெருமித உணர்வை வளர்த்துக் கொள்வதிலும் இந்தத் தலைமுறை ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் சொன்னேன். குடும்பத்தில் இருந்து கிளம்பும் இந்த உணர்வு, ஊர், ஜில்லா, மாநிலம், நாடு என்று விரிவடையும். செய்வோமா?

 

ªË© µ°Áš®Í ªËŸÍŸ¤Á…. ***‡¨Í¤¤Í ¤²È®Á±È¯¿²Í ªÆ°Á®Íª¾²Á®Í ¤¾¤Í¤¾ ª¾ŸÍŸ¿ µ°È ª²°Á®Í ª¾°Í¤Í¤¿°ÁªÍªË®Í. …¤¾µ¤Á ¨®•Í•Á ®Á¨…

Posted by Senkottai Sriram on Thursday, February 4, 2016

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,897FollowersFollow
17,300SubscribersSubscribe