சென்னை சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற இளம் பெண்! காரணம்?

Published:

nute 1 - 2026

சென்னையில் 20 வயது இளம்பெண் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, விசாரணையில் அந்த பெண்ணுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர்.

அதைத்தொடர்ந்து வயிறு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அந்த பெண்ணை காவல்துறை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை உள்ள ராயப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை அளவில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்வதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த ராயப்பேட்டை காவல்துறை அதிகாரி தன் கையோடு கொண்டு வந்திருந்த துணியை எடுத்து அந்த பெண்ணுக்கு போர்த்தி விட்டார். பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அந்தப் பெண்ணுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள்.

இந்நிலையில், திடீரென அந்த பெண் வயிறு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அதனை கேட்ட காவல்துறையினர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் யார்? எதற்காக இதுபோன்று நிர்வாணமாக ரோட்டில் வந்தார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் முதல் கட்ட விசாரணையின் போது அந்த பெண்ணுக்கு மன நலம் சரியில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img