அதிமுக., இரு அணிகளும் இணையும்: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை

edappadi palanisamy - 2026

சென்னை:
அதிமுக.,வின் இரு அணிகளும் இணையும் என்று தாம் நம்புவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு மந்தை மேம்பாலத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் இரு அணிகள் இணைவது குறித்து என்ன திட்டம் உள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “அதிமுக., இரு அணிகள் இணைப்பு நடைபெறும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

மேலும், “நீட் நுழைவுத் தேர்வில் நாங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். மாணவர் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை கவனமாக எடுத்துக் கொண்டு எந்தவித சட்ட சிக்கலும் வராத அளவுக்கு இதில் முடிவுகள் எடுக்கப் படும். இந்த விவகாரத்தில் மாநில அரசைப் பொறுத்தவரை தமிழக மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு இந்த அரசு செயல்படுகிறது. அதற்காக நானும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

அண்மையில் குடியரசுத் தலைவர் பதவியேற்புக்கு தில்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடம் இரு அணிகளும் இணையவேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு பாஜக., சார்பில் எடுத்துரைத்தாகக் கூறப்படுகிறது. மோடியும் இதனை அவர்களிடம் வற்புறுத்தியதாகவும் சொல்லப் படுகிறது. எனவே இது குறித்த பேச்சு தமிழகத்தில் எழுவது வாடிக்கையாகிவிட்டது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories