தருமபுரி அருகே காவல்நிலையம் முன்பாக இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

தருமபுரி அருகே காவல்நிலையம் முன்பாக இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல் நிலையம் முன்பாக இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். புகாரை காவல்துறையினர் பெறாததால் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

ஏரியூரை அடுத்த மஞ்சப்பட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி  ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏரியூர் காவல் நிலையத்திற்கு சென்ற அவர், யாரும் எதிர்பாராத விதமாக உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். அக்கம் பக்கத்தினர் மணலை வீசி காப்பாற்ற முயன்ற போதும் பலனளிக்காமல் ஆசைத்தம்பி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img