ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் கொடுப்பதற்குள் வரிந்துகட்டி வரும் அதிமுக., எம்.எல்.ஏ.,!

Published:

h.raja - 2026

திருப்பூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோயில்களான விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகப் பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து விட்டு அகல மறுக்கும் நபர்களுக்கு கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்குள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்து வருகிறார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., இதற்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு…

திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை காலிசெய்ய கோவில் செயல் அலுவலர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அஇஅதிமுக எம்.எல்.ஏ எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது. அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img