
வைகோ, திருமாவளவன் சீமான் போன்றோர் ஒன்றாக சேர்ந்து ஒரு தேதி குறித்து அறிவித்துவிட்டு இந்து கோயில்களை இடிக்க வரட்டும்… இந்து முன்னணி
மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் சவால் விடுத்தார்.
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசபட்ட இடத்தில் பார்வையிட்ட செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் வினை விதைத்ததன் விளைவு தான் தற்போது நடைபெற்று வருகிறது.
H.ராஜா தனி மனிதர் அல்ல அவருக்கு பின்னால் இந்து முன்னணி துணை நிற்கும்.
திரிபுராவில் கம்யூனிசம் தோற்றது போல் தமிழகத்திலும் திமுக மற்றும் அதிமுக காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. கிறித்துவ, முஸ்லிம் மற்றும் நக்சலைட்கள் இவர்கள் பின்னனியில் இருந்து தமிழகத்தில் ஒரு கலவரத்தை தூண்ட முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதாகவும்,
இந்து முன்னணியினரை அமைதி காக்க கூறியதால் வன்முறைகள் ஏதும் நடக்காமல்
கட்டுக்குள் இருப்பதாகவும் எனவே இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது
குறித்து காவல் துறை விசாரிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
திருமாவளவனுடன் சேர்ந்து வைகோ, திருமுருகன்காந்தி, நாம்தமிழர் கட்சியினர் போன்றோர் கோவிலை இடிக்க வரட்டும் எனவும் அப்போது இந்துக்கள் கையை
வெட்டுவார்களா வேறேதும் வெட்டுவார்களா என தெரியும் என வைகோவிற்கு
பகிரங்க சவால் விடுத்தார்.



