‘அம்மா’வின் அந்த ஆடியோ அப்பலோல பதிவு செய்யப் பட்டதுதானா..?!

ஜெயலலிதா தனக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக பேசிய ஆடியோ, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்டது தானா என்பதில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

2016ல் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் மூச்சுத் திணறலுடன் பேசியதாக ஆடியோ பதிவுகளை மருத்துவர் சிவகுமார், இந்த விவகாரத்தை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்படைத்தார்.

ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம் 80 / 140 என்ற அளவில் நார்மல் தான் என்று மருத்துவரிடம் ஜெயலலிதா கூறுவது போல் ஆடியோவில் பதிவாகி இருந்தது. ஆனால் அன்று ஜெயலலிதாவுக்கு இருந்த ரத்த அழுத்த அளவு தொடர்பாக அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்யப் பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட அளவுகளில் முரண்பாடு உள்ளதாம்.

ஜெயலலிதாவின் அந்த ஆடியோவை மருத்துவர் அர்ச்சனா எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவர் அர்ச்சனா அதற்கு மறுநாள்தான் ஐசியூவில் பணிக்கு வந்ததாக அப்போலோ மருத்துவமனையில் உள்ள ஆவணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தக் காரணங்களால்,  ஜெயலலிதா பேசிய ஆடியோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டதுதானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாம்.