ஈஸ்டர் பண்டிகை: சர்ச்சுகளில் நள்ளிரவு பிரார்த்தனைகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

christian ester - 2026

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புனிதவெள்ளியை தொடர்ந்து கல்லறையில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கிறித்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

அப்போது, பட்டாசுகள் வெடித்து ஈஸ்டர் பண்டிகை ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.