periyava-namavali
periyava-namavali

உலக அமைதி வேண்டி யும் கொரானா நோயிலிருந்து மீண்டு நாடு வளம் பெற வேண்டியும் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பிரார்த்தனை செய்யும் வகையில் வகையில் அகண்ட கோடி மஹா மந்திரம் நிகழ்ச்சி – பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே 108 முறை ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் கோடி நாமாவளி

உலகமே கொடிய நோயான கொரானா வைரஸ் என்ற நோயில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது., கொரானா வைரஸ் நோயை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.,

மதுரை கூடல்நகர் அருகே அஞ்சல் நகரில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பாக நிறுவனர் நெல்லைபாலு தலைமையில் உலக மக்கள் அமைதி வேண்டியும், கொரானா நோயிலிருந்து மீண்டு நாடு வளம் பெற வேண்டியும் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பிரார்த்தனை செய்யும் வகையில் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் – கோடி நாமாவளி என்ற அகண்ட கோடி மஹா மந்திரம் தொடக்க நிகழ்ச்சி ஸ்ரீ மஹா பெரியவா கிரஹத்தில் நடைபெற்றது.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

60 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று மஹா பெரியவா விக்ரஹம் முன்பு பக்தர்கள் 108 முறை ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் என்று ஜெபம் செய்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.,

மேலும் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே மஹா பெரியவா சரணம் நாமாவளி செய்வதற்கு சமூக வலைதளம் மூலம் பக்தர்களுக்கு அனுப்பி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9442630815 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்து அவர்கள் தினந்தோறும் சொல்லும் மந்திரங்களின் எண்ணிக்கையை அனுப்பலாம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending