
கிருஷ்ணா மாவட்டம் ரெட்டிகூடம் ருத்ரவரம் கிராமத்தைச் சேர்ந்த கரிகிபாடி வெங்கடேஸ்வரலு என்பவருக்குச் சொந்தமான எருமை மாடு இரண்டு தலைகள் கொண்ட கன்றினை ஈன்றுள்ளது.
இந்த விந்தையான கன்றுகுட்டி கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. குடும்பத்தினர் இது குறித்து வெட்ரினரி டிபார்ட்மெண்டுக்கு செய்தி தெரிவித்தார்கள்.

கால்நடை மருத்துவர்கள் வந்து இரண்டு தலைகளுடன் பிறந்துள்ள எருமை கன்றினை ஆராய்ந்து வருகிறார்கள்.