நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த 30 வயது ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சிரஞ்சித் திபார் கொரோனா தடுப்பூசி போட்டு சோதனை நடத்திக் கொள்வதற்கு முதல் மனித சோதனைக்கான தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு வரும் கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க திபார் பெரு விருப்பத்துடன் முன்வந்தார். வைரஸின் ஆன்டிஜெனைப் பெற ஐ.சி.எம்.ஆரின் பாட்னா மையத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. ஒடிசாவிற்கு அவர் தடுப்பூசி வழங்கப்பட அழைக்கப் படுவார் என்று எதிர்பார்க்கிறார்.
அவர் ஏப்ரல் மாதமே இத்தகைய மருத்துவ பரிசோதனைக்கு விண்ணப்பித்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ஆர்.எஸ்.எஸ்.ஸால் ஈர்க்கப்பட்டு, என் உடலை அரசு மற்றும் சமூகத்தின் நலனுக்காக கோவிட் -19 தடுப்பூசி சோதனைக்கு நன்கொடையாக அளித்துள்ளேன்” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு COVID-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முதலிடத்தில் வைக்கும் முயற்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) உடன் கைகோர்த்திருந்தது.
அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா, ஐசிஎம்ஆர் நம் நாட்டின் கோவிட் -19 தடுப்பூசியை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
“அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின் 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலக்கை அடைய பிபிஐஎல் விரைவாக செயல்படுகிறது, இருப்பினும், இறுதி முடிவு, சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ சோதனைத் தளங்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது!
“இது இந்தியா உருவாக்கிய முதல் உள்நாட்டு தடுப்பூசி! இது அரசின் உயர் மட்டக் கண்காணிப்பில், முதல் முன்னுரிமை திட்டங்களில் ஒன்று. இந்த தடுப்பூசி, ஐசோலேடட் SARS-CoV-2 விலிருந்து பெறப்படுகிறது. புனேயில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, ஐ.சி.எம்.ஆர் மற்றும் பிபிஐஎல் ஆகியவை இந்த தடுப்பூசி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுகின்றன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் சி.டி.எஸ்.கோ (மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு) ஞாயிற்றுக்கிழமை கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகிய இரண்டு இந்திய கோவிட் -19 தடுப்பூசிகளின் மனித மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோயால் (COVID-19) பாதிக்கப்பட்டுள்ள உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது! ஏற்கெனவே ரஷ்யாவை முந்திய நிலையில், இந்தியா இப்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பின் உள்ளது. எனவே இது ஆசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிகப்பெரிய மையமாக மாறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 22,700 க்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை புதன்கிழமை 7.42 லட்சத்தைக் கடந்து விட்டது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 20,600 ஐக் கடந்துள்ளது.
COVID-19 கேஸ்களின் சோதனை, உடனடி தொடர்பு தடமறிதல் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ மேலாண்மை குறித்து மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமுதாய பரிமாற்ற நிலையை அடைந்துவிட்டது என்பதை மத்திய அரசு மறுத்து வருகிறது.