விநாயகர் அகவல்

ஆலயங்கள்
விநாயகர் அகவல்

Ganesha%5B5%5D - 2026

சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வண்ண மருங்கில் வளர்ந்தழ கெரிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு செந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு சுரமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த தரிய மெய்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் முஷிக வாக
இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டி
தாயா யெனக்குத் தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கமறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துத் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகந்து
குருவடிவாகி குவலயத்தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத் தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி யென்செவியில்
தெவிட்டாத ஞானத்தெளிவையுங்காட்டி
ஐம்புலன் தன்னை அடக்குமுபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகள் ஒடுங்குங் கருத்தினையறிவித்து
இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி
ஆறதாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடபிங் கலையின் எழுத்தறி வித்தே
கடையிற் சுழுமுனை கபாலமுங்காட்டி
மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுரைத்து
குண்டலி யதனின் கூடிய சபையில்
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் முண்டெழு கனலை
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தனியக்கமும்
குமுத சகாயங் குணத்தையுங்கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையுங்காட்டி
சண்முக தூலமும் சதுர்முக தூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தரிசனப்படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைகளைந்தே
வாக்கு மனமும் இல்லா மனோலயந்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டின் கொன்றிடமென்ன
அருள் தருமானந்தத்தை யழுத்தியென் செவியில்
எல்லையில்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்து அருள்வழிகாட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக்கரத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலiயைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரள்கரண் சரணே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.