உருவாக்கிய குருவுக்கு சச்சின் செலுத்திய இறுதி மரியாதை!

தன்னை உருவாக்கிய குருவுக்கு எவர் கிரீன் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் செலுத்திய இறுதி மரியாதை பலரையும் நெகிழச் செய்துள்ளது. தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்கிய பயிற்சியாளர் அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார் சச்சின் டெண்டுல்கர். இது, சச்சின் மீது ரசிகர்களின் நன்மதிப்பு மேலும் உயரக் காரணம் ஆகியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் கடவுள்கள் என்று வர்ணிக்கப் பட்டவர் சச்சின் டெண்டுல்கர்! முறியடிக்க இயலாத பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். சச்சினின் பெயருடன் இந்தியாவின் பெயரும் சாதனைப் பட்டியலில் டாப் லிஸ்டில் இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர்!

சச்சினுடன் வினோத் காம்ப்ளி என்ற சிறந்த வீரரையும் உருவாக்கியவர் அச்ரேகர். அகார்கர் என்ற பந்துவீச்சாளரின் உருவாக்கத்திலும் முத்திரை பதித்தவர்!

சச்சினை சிறு வயதில் இருந்தே உருவாக்கி கிரிக்கெட் வீரராக வளர்த்தவர் ராமகாந்த் அச்ரேக்கர். இவர்களுக்கு இடையேயான குரு – சீடன் உறவு மிகவும் நுட்பமானது. 87 வயதான அச்ரேகர், ஜன.2 புதன்கிழமை நேற்று காலமானார். இன்று அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலைச் சுமந்து சென்றார் சச்சின்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...