உடல்நிலை குறைவு காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

தமிழகம்

karunas 1 - 2026

எம்.எல்.ஏ. கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த நிலையில் கருணாசுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு நெல்லையில் தமிழ்நாடு தேவர் பேரவை நிர்வாகிகள் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் கருணாசை போலீஸ் தேடுகிறது. இதனையடுத்து பூலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸ் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.