“படிங்க தாத்தா… படிங்க..!”

கட்டுரைகள் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
uvesaiyer
uvesaiyer

படிங்க தாத்தா….படிங்க…!”
– உ வே சாமிநாத ஐயர் பற்றிய சுவையான

சிறிய தகவல்

ஒருமுறை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பேசுவதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடக்கவிருந்த இடம் ஓர் அரங்கத்தின் மாடியில் என்பதால் படி ஏறித்தான் செல்ல வேண்டும்.

உ.வே.சா.அவர்களை மாடிக்கு அழைத்துச் செல்ல ஒரு பதின்ம வயது சிறுவனை ஏற்பாடு செய்திருந்தனர்.

சிறுவன் தமிழ்த் தாத்தாவின் கையைப் பிடித்தபடி, ஒவ்வொரு படி ஏறும்போதும், “படிங்க தாத்தா….! படிங்க தாத்தா..” என்று சொல்லிச் சொல்லி அழைத்துச் சென்றான். 

கூட்டத்தில் பேசும்போது உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள், “நான் நிறையப் படித்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தக் கூட்டம் நடக்கும் அறைக்குக் கூட்டி வந்த சிறுவன், என்னைப் பார்த்துப் “படிங்க தாத்தா…! படிங்க தாத்தா…!’ என்று கூறிக்கொண்டே வந்தது, நான் இன்னும் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது..!” என்று, நயமாக உரை நிகழ்த்தினார்.

“என் ஆசிரியப் பிரான்”-கி.வா.ஜகந்நாதன் – நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.