மியான்மர் நாட்டின் யங்கூன் நகரில் வி கேஸ்ட்ரோ என்ற இரவு விடுதியை நடத்தி வரும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பிலிப்ஸ் பிளாக்வுட் ( வயது 32) தனது இரவு விடுதி விளம்பரத்திற்காக கடந்த டிசம்பர் மாதம் புத்தர் ஹெட்போன் அணிந்திருப்பது போல் ஒரு போஸ்டரை வடிவமைத்து பேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த போஸ்டருக்கு மியான்மரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது புத்தரையும் புத்த மதத்தையும் அவமதிப்பது போல் உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மியான்மர் அரசு அந்த இரவு விடுதியை மூட உத்தரவிட்டது. மேலும் விடுதியின் உரிமையாளர், பிளாக்வுட், மியான்மியரைச் சேர்ந்த துன் துரியன், ஹுட்டுட் கோகோ லிவின் ஆகிய பணியாளர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது புத்த மதத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நியூசிலாந்தைச் சேர்ந்த பிளாக் வுட்டுக்கு இரண்டரை வருட சிறைத் தண்டனையும் மியான்மியரை சேர்ந்த 2 பேருக்கு 2 வருட சிறைத் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பிளாக் வுட்டுக்கு தண்டனை அளித்திருப்பதற்கு சர்வதேச மனித உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹெட்போன் அணிந்த புத்தர் படம்: பேஸ்புக்கில் வெளியிட்டவருக்கு இரண்டரை ஆண்டு சிறை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week