பில் கிளிண்டன், ஒபாமா வீடுகளில் வெடிகுண்டுகள்? செய்தியால் பரபரப்பு!

உலகம் சற்றுமுன்

obama hilary - 2026

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஓபாமா வீடுகளுக்கு வெடிகுண்டுகள் அனுப்பப் பட்டதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இருவரும் நியூயார்க் வடக்குப் பகுதியில் உள்ள சாபாக் என்ற நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நண்பகல் 1 மணி அளவில் இவர்களது வீட்டில் வெடிகுண்டுகள் அனுப்பப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

தகவல் அறிந்த எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் நியூகேஸில் போலீசார் அங்கு விரைந்து சென்று வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்  முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரம் அவர்களது வீட்டில் கிளிண்டனும், ஹலாரியும் இல்லை எனப்படுகிறது.

பின்னர் ஒபாமா வீடு, கிளிண்டன் வீடுகளுக்கு வெடிகுண்டுகள் அனுப்பப் பட்டதாக வந்த ஊடகச் செய்திகள் தவறானவை என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.