
3 முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் –
மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு, தென் மாவட்டங்கள் வழியாக இயங்கும் பல முக்கிய ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிடும் முன் மாற்றங்களை தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குருவாயூர் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128):
நவம்பர் 1, 3, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் டிசம்பர் 1, 3, 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயில், விருதுநகர், மணமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய ஸ்டேஷன்களைத் தவிர்க்கும். மாறாக, அருப்புக்கோட்டை, மணமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் சந்திப்பு – கோயம்புத்தூர் சந்திப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16321) இந்த
நவம்பர் 2, 4, 11, 13, 16, 18, 20, 23 மற்றும் டிசம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் காலை 08.00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், விருதுநகர், காரைக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இது திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய ஸ்டேஷன்களில் நிற்காது. மாறாக, அருப்புக்கோட்டை, மணமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
செங்கோட்டை – மதுரை சந்திப்பு பாசஞ்சர் (வண்டி எண்: 56772):
நவம்பர் 2, 4, 11, 13, 16, 18, 20, 23 மற்றும் டிசம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு மதுரை சந்திப்பை அடைய வேண்டிய இந்த ரயில், விருதுநகர் மற்றும் மானாமதுரை சந்திப்பு வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இது கள்ளிக்குடி, திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய ஸ்டேஷன்களைத் தவிர்த்து, மணமதுரை மற்றும் மதுரை கிழக்கு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
மதுரை சந்திப்பு – ராமேஸ்வரம் பாசஞ்சர் (வண்டி எண்: 56711):
நவம்பர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சேவை, ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ராமநாதபுரத்துடன் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும்.
நவம்பர் 19, 20, 21, 25, 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மண்டபத்துடன் நிறுத்தப்படும்.
ராமேஸ்வரம் – மதுரை சந்திப்பு பாசஞ்சர் (வண்டி எண்: 56714):
நவம்பர் 5 மற்றும் 12 தேதிகளில் ராமேஸ்வரம் – ராமநாதபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
நவம்பர் 19, 20, 21, 25, 26, 27 மற்றும் 28 தேதிகளில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மண்டபத்தில் இருந்து புறப்படும்.
செங்கோட்டை – திருநெல்வேலி சந்திப்பு பாசஞ்சர் (வண்டி எண்: 56742):
நவம்பர் 26, 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலி சந்திப்பு – செங்கோட்டை பாசஞ்சர் (வண்டி எண்: 56743):
நவம்பர் 26, 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் சேரன்மகாதேவி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் – திருநெல்வேலி பாசஞ்சர் (வண்டி எண்: 56004):
திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், நவம்பர் 26, 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு – திருச்செந்தூர் பாசஞ்சர் (வண்டி எண்: 56003):
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், நவம்பர் 26, 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

