write thoughts - 2026

இந்த சூழ்ச்சிககு இந்தியா பலியாகாது; ஆகக்கூடாது!

உரத்த சிந்தனை அரசியல்
write thoughts - 2026
#image_title

ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தில் எதிர்க்கட்சிகள், தேச விரோதிகள், நக்சல்கள் அனைவரும் எப்படி ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராடக்கூடாது என்று அரசு அறிவித்து விட்டது. அதற்கு பதிலாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் போராடுவதற்கான இடமும் அறிவித்திருக்கிறது. அதே போல கரப்பான்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா இருவரும், இனிமேல் அனுமதி இல்லாமல் போராட மாட்டோம் என்று, நீதிமன்றத்தில் பாண்ட் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு பிரச்சினைகளையும் முன்னிறுத்தி ஒரு திட்டம் போடுகிறார்கள். சௌரவ் தாஸ், அஷுதோஷ் இருவரும் தேசியக் கொடியை எடுத்துக் கொண்டு தடைசெய்யப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்வது. தடையை மீறியதற்காக காவல்துறை அவர்களை கைது செய்யும். உடனே தேசியக் கொடியை எடுத்துச் சென்றதற்கு கைது என்று செய்தி பரப்புவார்கள். நேரேட்டிவ் செட் செய்வார்கள்.

நேற்று இதுதான் நடந்தது. ஒட்டுமொத்த கூட்டமும் ஒரே மாதிரி பதிவுகள் போடுகின்றன. எல்லோருடைய பதிவிலும் தேசியக் கொடி கண்டன்ட் தவறாமல் இடம் பிடித்திருக்கிறது.

இதற்கு முன்பு எமர்ஜென்சி என்ற வார்த்தையை அனைவரும் பயன்படுத்தினார்கள். இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்று ஒரே மாதிரி வாந்தி எடுத்தார்கள். அது செல்ப் எடுக்கவில்லை என்றவுடன் அடுத்த நேரேட்டிவ்.

இன்னொரு பக்கம் ராகுல் பைத்தியமாகாத குறையாக சுற்றுகிறார். கரப்பான்கள் காங்கிரசை கழட்டி விட்டு தனி ஆவர்த்தனம் வாசிக்கிறது. மூன்றாவது அணிக்கு திட்டம் போடுகிறது. அதனால் ராகுலுக்கு வேறு வழியில்லை. அவரை நம்பி இளைஞர்கள் வேறு வரமாட்டேன் என்கிறார்கள். எனவே நேஹா போராவை பிம்ப கட்டமைப்பு செய்து முன்னிறுத்துகிறார். கூடவே தேச விரோதிகள், நக்ஸல்களாக பார்த்து முன்னிறுத்துகிறார். நேற்று இந்தி கூட்டணி மீட்டிங் நடக்கும் பொழுது நேஹா போரா தான் அனைவருக்கும் முன்னால் பேசுகிறார். மற்றவர்கள் பேசுவதை நிறுத்தி விட்டு நேஹாவை பேசச் சொல்கிறார் ராகுல்.

இவர்களுடைய திட்டம் எல்லாம் வெளிப்படையானது. காவல்துறையை ரியாக்ட் செய்ய வைக்க வேண்டும். அரசாங்கத்தை கோபப்படுத்த வேண்டும். அதற்கு தான் பக்காவாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நீட் போராட்டத்திலேயே இதை செயல்படுத்தினார்கள். அதாவது சிறிதளவு மக்கள் ஆதரவு இருந்தது. இந்த போராட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தான் இருக்கிறது.

காவலர்களை கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும். அவர்களை தாக்க வேண்டும். கோபப்படுத்த வேண்டும். ஒருகட்டத்தில் போலீஸ் ரியாக்ட் செய்தால், பக்கத்திலேயே கேமரா இருக்கிறது. பார்த்தீர்களா காவல்துறையின் அராஜகத்தை என்று மீடியா பரோபகாண்டா ஆரம்பித்து விடும். நேற்று ராகுல் அதைத்தான் செய்தார்.

இது பக்காவான திட்டமிடல். கரப்பான் முதல் இந்தி கூட்டணி தலைவர்கள், ராகுல் வரை இதை திட்டமிட்டு செயல்படுத்தினார்கள்.

பொதுவாக போராட்டம் நடத்தும் அரசியல்கட்சிகளை காவல்துறை கைது செய்யும். தொண்டர்களும் பேசாமல் வேனில் ஏறி கோஷம் போட்டுவிட்டு சென்று விடுவார்கள்.

ஆனால் இந்த போராட்டத்தில் காவலர்கள் கைது செய்யும் போதெல்லாம் கடுமையான எதிர்ப்பை காட்டுகிறார்கள். அதுதான் திட்டம். மாணவர்கள் என்று போர்வையில் அனைவருமே ஒரே மாதிரி நடந்து கொள்வதை பார்க்கலாம். இந்தி கூட்டணி கட்சித்தலைவர்களும் இதையே செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பேபியை கைது செய்து வேனில் ஏற்றினால் அவர் அழிச்சாட்டியம் செய்கிறார். காவல்துறை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல பார்க்கிறது. இவர் துள்ளுகிறார். அனைத்தும் கேமராவில் பதிவாகிறது. அதை வைத்து நேரேட்டிவ். காவல்துறையின் அராஜகம் என.

ராகுலும் இதை தான் செய்தார். அழைத்தவுடன் வண்டியில் ஏறவில்லை. வண்டியில் ஏறிய பிறகு ஜன்னல் வழியே தப்பிக்க பார்த்தார். இவை அனைத்தும் பெரிய செய்திகளாக்கப்படுகின்றன. அனைத்துமே திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

நேற்று ராகுல் பேச வைத்த பெண்ணை கைது செய்த பொழுது பெண் காவலரின் முடியை பிடித்து இழுத்து கட்டி உருண்டு சண்டை போடுகிறார். பெண் காவலரும் திருப்பி அடிக்கிறார். அதை வைத்து இவர் இப்போது பேட்டி கொடுக்கிறார்.

அனைத்துமே திட்டமிட்டு நடப்பவை தான்.

ஜந்தர் மந்தரில் தான் போராடுவோம் என்று இவர்கள் சொல்லக் காரணம் என்ன. ஜந்தர் மாந்தர் பகுதியில் இருந்து மிக அருகில் பாராளுமன்றம் இருக்கிறது. போராட்டத்தை நீட்டித்து கொண்டே போனால் ஒரு கட்டத்தில் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்லலாம். காவல்துறை, துணை ராணுவம் தடுப்பார்கள். போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படும். அதை வைத்தும் அரசியல் செய்யலாம். ஒருவேளை தடுக்க முடியவில்லை என்றால் பாராளுமன்றம் தீக்கிரையாக்கப்படும்.

இந்தியாவில் ஜென் சி புரட்சி என்று உலக பத்திரிகைகள் அலறும். இதுதான் திட்டம்.
அதற்கு செக் வைத்து விட்டது மத்திய அரசு. பாராளுமன்றத்தில் இருந்து ராம் லீலா மைதானம் 5-6 கிமீ தொலைவில் இருக்கிறது. மீதம் உள்ள இடங்களும் 15 கிமீ தூரத்திற்கும் மேல் என்பதால் தேச விரோதிகள் கதறுகிறார்கள்.

கரப்பான்கள் மற்றும் காங்கிரசிற்கு இந்தியாவில் தான் ஆதரவில்லையே தவிர பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் படுபயங்கர ஆதரவு. பங்களாதேஷில் கரப்பான்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போகிறார்கள். பிரகாஷ் ராஜ், அபிஜித், இணைந்து மோடியை வீழ்த்துவார்கள் என்று பாகிஸ்தான் டிவியில் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள் பிணந்தின்னிகள்.

ராகுல் சொன்னது போல அனைத்து முனைகளில் இருந்தும் தாக்குதல். தகவல் போர் ஒரு பக்கம். களரீதியாக போராட்டங்கள். சட்டப்போராட்டங்கள் ஒரு பக்கம். உலக அளவில் பரோபகாண்டா செய்வது ஒரு புறம் என இந்தியா அண்டர் அட்டாக் என்பது தான் ஒரு வரி உண்மை.

இல்லாவிட்டால் டெல்லியில் அனுமதியின்றி போராடியவர்களை கைது செய்ததற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஐநா சபை மனித உரிமை கமிஷன் அறிக்கை வெளியிடுகிறது என்றால் இதற்கு பின்னால் இருக்கும் உலக அளாவிய சதித்திட்டத்தை புரிந்து கொள்ளலாம்.

SIR என்று சப்பை கட்டு கட்டினாலும், ஆட்சி மாற்றம் தான் இலக்கு, மோடியை வீழ்த்துவது தான் இலக்கு என்பதை வெளிப்படையாக சொல்லத் தொடங்கி விட்டார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலவரம் மூலம் கவிழ்க்க முயற்சி செய்பவர்களை தேசவிரோதிகள், அந்நியநாட்டு கைக்கூலிகள் என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.

இந்தியா ஒருபோதும் இந்த சூழ்ச்சிக்கு பலியாகாது. இது புதிய இந்தியா….

  • மகா தேவன்