ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

Published:

hindumunnani
hindumunnani

ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்‘; ’ தமிழகத்தில் தொடரும் இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு… தமிழகத்திற்கு ஆபத்து! என இந்துமுன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை :

தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கட்டுப்பாட்டுடன் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களும் பல இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. அதே சமயம் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லிம்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

குறிப்பாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளிவாசல் வாயிலில் இரு முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் முன்பே பாரத்மாதா கீ ஜெய் என்று கோஷம் போட்டால் குண்டு வெடிக்கும் என்று பொதுவெளியில் மிரட்டியுள்ளார்கள். அவர்களை உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளது பாராட்டதக்கது.

ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அவர்களை விடுவித்தது மர்மமாக உள்ளது. மேலிடத்தில் அழுத்தம் வந்ததால் விடுவிக்கப்பட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ALSO READ:  திமாகி நக்சல்கள் - யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

முஸ்லிம்களில் சிலர் குண்டு வைப்போம் என பகிரங்கமாக மிரட்டுவதும், போலீஸ் தாஜா போக்குடன் நடந்து கொள்வதும் தமிழகத்தை ஆபத்தில் தள்ளி விடும்.

இதுபோன்ற சம்பவங்களின் போது காவல்துறை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்க, அரசியல் அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். கடந்த காலங்களில் இத்தகைய அலட்சியம் தான் கோவை தொடர் குண்டு வெடிப்பு முதல் பல கொடூர கொலைகளுக்கு காரணமாக இருந்தது என்பதை தமிழக அரசும், காவல்துறை உயர் அதிகாரிகளும் மறந்துவிடக்கூடாது.

அருப்புக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் உள்ளே புகுந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ரகளையில் ஈடுபட்டனர். விழாக்குழுவை சேர்ந்த சிவசாமி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போதே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பவம் நடைபெற்று இருக்காது.

பாரத் மாதா கீ ஜெய் என கோசமிட்டால் குண்டு வெடிக்கும் என இருவர் மிரட்டியதும், இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறை அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது மதவாத காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் போஸ்டர்களை வெளியிட்டுள்ளதும், இஸ்லாமிய அமைப்புகளின் பயங்கரவாத ஆதரவை வெளிப்படுத்துகிறது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

தமிழக அரசுக்கு நெருக்கடி மற்றும் அவப்பெயரை ஏற்படுத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பின்புலத்தில் சிலர் தூண்டி விடுகிறார்கள் என்று சந்தேகம் எழுகிறது.

நேற்று உத்தரபிரேதேசத்தில் இருந்து வந்து கோவையில் பதுங்கி இருந்த முஸ்லிம் பயங்கரவாதியை, உத்திரபிரதேச அரசின் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. அந்த இஸ்லாமிய பயங்கரவாதி மற்ற பயங்கரவாதிகளை இணைக்க ஒரு சமூக ஊடகத்தை தயாரித்து செயல்படுத்தியுள்ளான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பாதுகாப்பு மையமாக இருக்கிறதோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக கடந்த ஆட்சியை போல காவல்துறையின் கைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்படும்.

தமிழகத்தின் பாதுகாப்பில் புதிய அரசு எந்த சமரசமும் செய்யாமல் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் தர வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்!

Related articles

Recent articles

spot_img