அச்சன்கோவிலில் டிச.16ல் மண்டலோத்ஸவம் தொடக்கம்!

செங்கோட்டை: புகழ்பெற்ற அச்சன்கோவில் ஆலயத்தில் மண்டலோத்ஸவம் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ள ஐயப்பனின் படைவீடான அச்சன்கோவிலில் மண்டலோத்ஸவம் வரும் டிச.16ம் தேதி...

வைக்கம் மகாதேவாஷ்டமி இன்று..!

கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டமி விழா. மலையாள விருச்சிக மாதம் பெளர்ணமியை அடுத்துவரும் அஷ்டமி மகாதேவாஷ்டமி எனப்படுகிறது. வைக்கம் கோயிலில் இந்த...

டிச.18இல் வைகுண்ட ஏகாதசி: ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்!

திருப்பதி: டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா கோலாகலம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில், இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான இன்று அண்ணாமலையார் கருவறையில் பரணி...

கார்த்திகையில் கார்த்திகை… திருமங்கை ஆழ்வாரின் திருநட்சத்திர தினத்தில்… !

நீலன்; கள்ளர் குலத்தவர். சோழப் பேரரசின் தளபதி. இவர் திருவாலி எனும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலிநாட்டு பெரியநீலன் என்ற படைத் தளபதிக்கும் வல்லித்திரு எனும் மங்கைக்கும் மகனாகப் பிறந்தவர். போரில் எதிரிகளைக்...

வெறிச்சோடிய சபரிமலை! சரித்திரத்தில் இல்லாத சரிவு! பிணராயி பிறப்பித்த 5 கட்டளைகள்!

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்கள் வருகை வெகுவாக சரிந்துள்ளது. இதற்குக் காரணம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலையில் போலீஸாரே நிறைந்திருப்பதுதான் என்கிறார்கள் சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள்! இந்த...

கார்த்திகை தீபத் திருவிழா! திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை மகா தீபத் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மிகப் பழைமை வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது...

நள்ளிரவுக் கைதுகள்; தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேற்றம்; கெடுபிடிகள்! சபரிமலை சீனாவில் இருக்கிறதா?!

சபரிமலை: சபரிமலையில் எந்த வருடமும் இல்லாத கெடுபிடிகள் இந்த முறை வெகுவாக அதிகரித்துள்ளன. பக்தர்களை ஆன்மிக அன்பர்களாக அணுகாமல் குற்றவாளிகளைப் போல் அணுகும் காவல் துறையைக் கண்டு, பக்தர்கள் வாக்குவாதம் செய்தபடி செய்வதறியாது...

கார்த்திகை முதல் சோமவாரம்: குற்றாலம் அருவியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி; வழிபாடு!

குற்றாலம்: இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, திருக்குற்றாலம் அருவியில் நீராடி பூஜை செய்வதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதை முன்னிட்டு,...

சபரிமலை போராட்டம்… சசிகலா டீச்சர் கைது; கேரளத்தில் இன்று முழு அடைப்பு!

திருவனந்தபுரம்: கேரளத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் சசிகலா டீச்சரை சபரிமலையில் காவல்துறை அத்துமீறி கைது செய்ததைக் கண்டித்து

சபரிமலையில் கனமழை! புயல் எச்சரிக்கை அறிவிப்பால் பரபரப்பு!

சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு வேறு விடுக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் 64 அடி உயர தங்க கொடி மரத்தில்...

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தரிசனம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்து, அரஹரோஹரா கோஷம் முழங்க பெருமானை தரிசித்து வழிபட்டனர். முருகப் பெருமானின்...

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு...

குளிர்காலம் தொடங்கியதால் கேதார்நாத் கோயில் மூடல்! நிறைவு பெறுகிறது சார்தாம் யாத்திரை!

வெள்ளிக்கிழமை கோயில் நடை அடைக்கப்பட்ட பின்னர், ஐந்து முக சிவ பெருமானின் திருமேனி, ராம்பூருக்கு ராணுவ பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொண்டு செல்லப்படுவதாகக் கூறினார் பத்ரிநாத் கேதார்நாத் ஆலய கமிட்டியின் செயல் அலுவலர் என்பி ஜம்லோகி

539 பெண்கள்… ஆன்லைனில் ஆசை! அய்யப்பனை தரிசிக்கத்தான்!

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் வந்து அங்கே இருக்கும் தெய்வமான ஐயப்பனை பக்தியுடன் கும்பிட்டு, அருள் பெற்றுச் செல்வதுதான் முற்போக்குத் தனம் என்பது முதல்வர் பிணரயி விஜயனின் முற்போக்குத் தனமாக இப்போது பரிணாமம் பெற்றிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மதமாற்ற அபாயத்தில் திருமண் தயாரிக்கும் ஜடேரி கிராமம்! மக்களுடன் உரையாடிய ஆன்மிகப் பெரியவர்கள்!

ஜடேரி கிராம மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் செய்யும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் சுய மதிப்பையும் உணரச் செய்யவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம் என்றார். மேலும், மக்களுடன் பேசி அவர்களின் ஆன்மிக சந்தேகங்களைப் போக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி, உதவி செய்த இந்து மக்கள் கட்சி தொண்டர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றார்.

சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை; கேரளம் மாதூரில் தொடங்கி வைத்தார் எடியூரப்பா!

சபரிமலை ஆசாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெறும் இந்த ரத யாத்திரை, வரும் 13ஆம்தேதி சபரிமலை சென்றடைகிறது.
video

சபரிமலை; குழப்பம் விளைவித்த கம்யூனிஸ்ட்கள்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்!

சபரிமலை; குழப்பம் விளைவித்த கம்யூனிஸ்ட்கள்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்!

சபரிமலையில் நியூஸ் சேனலால் கொந்தளிப்பு! ஒளிப்பதிவாளர் காயம்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்.,!

மாத்ருபூமி சேனலில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ)-ஐச் சேர்ந்த நபர் ஒருவர், சபரிமலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.,தான் என்று பேட்டி அளித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இடையே இந்த சேனலின் செய்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீஸார் அந்த சேனலின் ஒளிப்பதிவாளரையும், டிஒய்எஃப்ஐ., நபரையும் காப்பாற்றி வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

சமூக தளங்களில் தொடர்க:

9,969FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,297SubscribersSubscribe

சினிமா செய்திகள்!