வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனக் கூறினார்.

உண்மையில், தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே 3 எம்பி.,க்களையும் பின்னர் 4 எம்பி.,க்களையும் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ.,வையும் கூட்டணியில் இருந்து கொண்டு ஓர் உறுப்பினரையும் பெற்ற கட்சி பாஜக.,! இன்றும் ஒரு எம்.பி.,யைக் கொண்டுள்ள பாஜக., மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு, மத்திய இணை அமைச்சராக ஒரு அமைச்சரவை உறுப்பினரையும் பெற்றுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி என்று சொல்லிக் கொண்டு, இலங்கைத் தமிழரின் இறப்பையும் சோகத்தையும் வியாபாரம் செய்து கொண்டு, பிண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ சீமான், இலங்கையில் தமிழ் கலாசாரம், குறிப்பாக சைவ மரபை அழித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை!

வேலு நாச்சியார் இந்த மண்ணை விட்டு விரட்டி விடப் போராடியது, பீரங்கிகளுடனும் துப்பாக்கித் தோட்டக்களுடனும் தமிழக மண்ணில் கால் வைத்த கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இயங்கிய கிறிஸ்துவ பாதிரிகளையும், கிறிஸ்துவம் மூலமாக மதத்தை சந்தைப் படுத்த வந்த வியாபாரிகளான ஆங்கிலேயரையும்தான்!

மருது சகோதரர்கள் துணையுடன் வேலு நாச்சியார் ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கைச் சீமையை மீட்ட பின்னர் கோட்டையில் இருந்த கிறிஸ்துவக் கொடியை இறக்கி விட்டு, தனது அனுமன் கொடியை கோட்டையில் ஏற்றினார்.

ஆனால், மதம் பரப்ப வந்த கிறிஸ்துவ பாதிரிகளிடம் விலை போன கிறிஸ்துவரான சைமன் என்ற சீமான், வேலு நாச்சியாரைப் பற்றிப் பேசவோ, தமிழன் என்று சொல்லி தமிழ் மண்ணில் நடமாடவோ சிறிதும் அருகதை இல்லாதவர்! தாம் ஒரு கிறிஸ்துவராக, கிறிஸ்துவ வேடத்தில், கிறிஸ்துவம் பரப்பிக் கொண்டு இங்கே திரியலாமே ஒழிய, இந்து மதக் கடவுள்களையும், இந்து மன்னர்களையும், இந்து மக்களின் வழிபாடுகளையும் முன் வைத்துக் கொண்டு அரசியல் பேசுவாரேயானால் அவர் இயல்பு நிலையில் உள்ள மனிதர் அல்ல என்பதையும், மூளை முழு வளர்ச்சி அடையாத மன நலம் குன்றிய நபர் என்பதையும் அவர் வெளிப்படுத்திக் கொள்கிறார் என்றுதான் நாம் எண்ண முடியும்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...