புதுக்கோட்டை: அனுமன் திருச்சபையினரின் ‘கல்வி விருது’ வழங்கல்!

Published:

pudukkottai kalvi viruthu0 - 2026

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது .

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் அரசு பொது தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற 10 -ஆம் வகுப்பு, , பிளஸ் -2 மாணவ மாணவிகளுக்கான கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அரசு பொது தேர்வு ஏழுதிய 10 -ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிபாடு ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜையில் கலந்து கொண்டு தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் விருதுகள் தொடர்ந்து 11 ஆண்டுகளாக கல்வி விருது வழங்கப்பட்டு வருகிறது .

அதன் தொடர்ச்சியாக, நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு திருக்கோகர்ணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லதா கந்தசாமிதலைமை வகித்தார். ஆஞ்சநேயர் திருக்கோயிலி கே.மணி குருக்கள் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் நிலவை பழனியப்பன் முன்னிலை வகித்தார்

pudukkottai kalvi viruthu - 2026

புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் கே.ஜி. பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 -ஆம் வகுப்பு, பிளஸ் – 2 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் ,மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கல்வி விருது வழங்கி வாழ்த்தி பேசினார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

நிகழ்வில் ஜெ ஜெ கல்லூரி பேராசிரியர் அனிதா ராணி திருக்கோகர்ணம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சினிவாசன், , மன்னர் கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரன், பல்வேறு பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் சமூகஆர்வலர்கள் மேப் டைலர் வீரையா நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, கவிதா மெட்டல் முருகேசன், லெட்சுமணன் உள்ளிட்டோர், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபை நிர்வாகிகள்வெகு சிறப்பாக செய்தனர். ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.


செய்தி/படம்: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை


Related articles

Recent articles

spot_img