December 6, 2025, 7:25 AM
23.8 C
Chennai

பசுவதையும் திராவிட வியாபாரமும்!

மகாராஷ்டிர அரசு பசுவதையை தடை செய்து மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கி உள்ளது. சர்வாதிகாரி ஸ்டாலினுக்காக, ஆங்கிலேயர்களுடன் கூட்டுச் சேர்ந்தவர்களுக்கும், ஆங்கிலேயர்களின் விசுவாசிகளாகவே தொடக்க காலம் முதல் இன்று வரை ’தீ’ராவிடமாக தமிழகத்தை பீடித்திருக்கும் கூட்டங்களுக்கும், காந்தி அடிகளின் இராமராஜ்ஜியம் கசக்கத்தானே செய்யும். dravidar veeramani 06.02.2015 தேதியிட்ட The New Indian Express பத்திரிக்கையில் //Eating beef was an ancient custom and part of several yagnas cited in Vedas, he said and added that it was mentioned in Valmiki’s Ramayana.// பசு மாமிசத்தை புசிப்பது வேத கால மரபு, இது இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது என்று திராவிட கழகத் தலைவர் வீரமணி என்ற வியாபார மணி விளக்கி உள்ளார். இதே தலைப்பில் இந்திய வரலாற்று ஆசிரியரான ஸ்ரீமாலி என்பவர் ZEE TVயில் நடத்தப்பட்ட ஆப் கீ அதலாத், ஆப்கா ஃபைஸ்லா என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, வேதங்களில் பல இடங்களில் பசுவை உண்டதாகக் குறிப்பு உள்ளதாகச் சொன்னார். நிகழ்ச்சியை நடத்திய ரகுவன்ஷி, பசு கொல்லப்படக் கூடாதது என்ற வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டி, எந்த இடத்தில் பசு கொல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று வலியுறுத்திக் கேட்டபோது வேதத்தில் இல்லை, வேத இலக்கியங்களில் இருக்கிறது என்றார். இந்த இந்திய வரலாற்று ஆய்வு மைய அறிஞரின் புத்தகங்களை படித்து விட்டு கக்குபவர்கள் எப்படி நேர்மையாக இருப்பார்கள். eminent historians 400x400 imadwgfdjms6z3gs இந்த டிவி நிகழ்ச்சியை பற்றிய விவரங்கள் திரு அருண் ஷோரி அவர்களின் “Eminent Historians” என்ற புத்தகத்தில் பக்கம் 40 முதல் 44 வரை பதிவிடப்பட்டுள்ளாது. இந்த வேதகால பசு மாமிச உணவு பழக்கத்திற்கு சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டுகிறார் வீரமணி. இதில் கூட விவேகமற்ற மோசடி வேலையைச் செய்துள்ளார் வீரமணி. யாகங்களில் இடப்படும் பசுவின் மாமிசத்தைப் புசிக்காமல் இருப்பவன் இந்துவே அல்ல என்று, விவேகானந்தர் சில யாகங்களில் பின்பற்றப்பட்ட மரபை மேற்கோள் காட்டி விட்டு, அடுத்த வரியிலேயே இந்தியர்கள் பசுமாமிசத்தை உட்கொள்ளுபவர்கள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியும் உள்ளார். //You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it. That is disgusting now. However they may differ from each other in India, in that they are all one – they never eat beef.// – The Complete works of Swami Vivekananda, Volume III சமீபத்தில் புதிய தலைமுறை விவாதத்தில் விவேகானந்தரை மேற்கோள் காட்டிய ‘சுகவியாபார பனியா’ என்ற சுப.வீரபாண்டியன், தெய்வத்தின் குரல் என்ற காஞ்சி பெரியவரின் புத்தகத்தில் பிராமணர்கள் பசு மாமிசம் உண்டார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது; ஆகவே, பெளத்தத்திற்கும், சமணத்திற்கும் எதிராக பிராம்மணர்கள் எடுத்த ஆயுதம் தான் பசுவதை எதிர்ப்பு, என்று வழக்கம் போல வளைத்து வளைத்து வாய்மூடாமல் பேசினார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில், வாஜபேய யாகம், சக்கரவர்த்தி யாகம் ஆகியவற்றில் பசுவை பலிகொடுத்ததற்கான குறிப்பைச் சொல்லும் காஞ்சிப் பெரியவர், அதிலிருந்து ஒரு துவரம் பருப்பு அளவிற்கு சற்றே அதிகமான பகுதியையே ஹவிர் பாகத்திலிருந்து விழுங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். //பிராம்மணர்கள் செய்ய வேண்டியதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும், 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக் கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது. மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் “தேவப் ப்ரீதி” என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே, இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம்; அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவு தான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும். ஆகையால், வேறு என்ன காரணம் சொல்லி யஞ்யத்தைக் கண்டித்தாலும் சரி, ‘பிராம்மணர்கள் இஷ்டப்படி மாம்ஸம் தின்னுவதற்கு யக்ஞம் என்று பெரிய பெயர் கொடுத்து ஏமாற்றினார்கள்’ என்றால் கொஞ்சங்கூட சரியில்லை.// – தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம். இந்த யாகம் செய்பவர்கள் இதைச் செய்யாவிட்டால் பாவம் என்பதின் அடிப்படையில், சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட, மாமிசத்தை உண்ணாதவர்கள் இந்துக்கள் அல்ல என்ற குறிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். சமணத்திற்கும் பெளத்ததிற்கும் எதிராக, பசுவதை இந்துக்களால் ஆயுதம் ஆக்கப்பட்டது என்பதையும், தெய்வத்தின் குரலில் காஞ்சி பெரியவர் மறுத்துள்ளார். //கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஓட்டிக்கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்’ என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை.// – தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம். பிராமணர்களின் சுயநலத்திற்காக பசுவை திண்பார்களாம்; ஆனால் பசிக்காக ஒரு தலித் பசுவை தின்பது இவர்களுக்குப் பொறுக்காது என்று இதற்கு ஒரு சாதீய கண்ணோட்டத்தையும் சுகவியாபார பணியா அருளியுள்ளார். காஞ்சிப் பெரியவரின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் யாகங்கள், சத்ரிய மன்னனுக்காகவும், அந்த தேசத்தில் வாழும் அனைத்து வர்ணத்தினரின் நலனுக்காகவும் செய்யப்பட்டன. மேலும், இந்த யாகங்கள் நம் நாட்டில் மிக அரிதாகத்தான் நடத்தப்பட்டும் உள்ளன. பொது நலத்திற்காக சில செயல்களை செய்வது பாவமல்ல என்ற கருத்தை, பசுவை யாகங்களில் பலியிடுவதற்கு ஒப்பாக்கி சொல்கிறார் காஞ்சி மாமுனிவர். //தர்மத்துக்காகச் செய்யவேண்டியது, எப்படியிருந்தாலும் பண்ணவேண்டும்; ஹிம்ஸையென்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை ஸகல ராஜ நீதிப் புஸ்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா? கொலைகாரனுக்குத் தூக்குத்தண்டனையை சட்ட புஸ்தகமே விதிக்கிறதல்லவா? அப்படி, லோகத்தில் பல பேருக்குப் பெரிய க்ஷேமத்தை தேவர்கள் செய்யவேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் அவர்களுக்குப் பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பேயில்லை.// – தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம். இப்படி இருக்க பிராம்ணர்களின் சுயநலம் என்றும், பரவலாக பசுமாடு கொல்லப்பட்டுள்ளது என்றும், விவேகானந்தரையும், காஞ்சி பெரியவரையும் மேற்கோள் காட்டிப் பேசுவது வழக்கமான ’தீ’ராவிட பிரச்சாரம். ramasita இராமயணத்தில் இராமபிரான் பசுமாமிசத்தை நெய்யில் வறுத்து சாப்பிட்டார் என்று வால்மீகியை வம்புக்கு இழுத்தார் சுகவியாபார பனியா. இவர் மேற்கோள் காட்டிய சுட்டுத் தின்ற நிகழ்வு இடம் பெற்றது ஆரண்ய காண்டத்தில் அல்ல, அயோத்தியா காண்டத்தில் (அயோத்தியா காண்டம் 2-96-1,2). இந்தப் பாடலிலும் கூட, மாமிசத்தைப் புனிதமான, சுவையான, சுட்ட இறைச்சி என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மாட்டிறைச்சி என்று குறிப்பிடப்படவில்லை. இந்த வேத இதிகாச மோசடிக் கும்பல், சங்க இலக்கியங்கள் மாட்டிறைச்சியை தமிழரின் உணவாகச் சொல்லியிருக்கிறது என்று சொன்னதுடன் நிறுத்தாமல், தலித்துகளின் வயற்றில் அடிப்பதற்கு பாஜக இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று கூவி வருகின்றனர். ஆதி திராவிடர் (தலித்) சமுதாயத்தில் தோன்றிய வள்ளுவ பெருமான், புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே படைத்துள்ளார். thiruvalluvar  

”கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றவை யவை”.

– திருக்குறள் என்ற குறளில், மாடு என்ற சொல் செல்வத்தை குறிக்கிறது. அப்படி என்றால், வள்ளுவப் பெருமானாரின் காலத்தில் செல்வத்திற்கு மாடு என்ற பொருள் வரவேண்டுமென்றால், பசுவைப் புசிக்கும் உணவாக அல்லாமல், செல்வமாக கருதி வந்தனர் என்பது தெளிவாகிறது. ஒரு நாட்டின் மன்னன் அந்நாட்டின் உயிர்களை காப்பாற்றாமல் முறை தவறி ஆட்சி செய்வதை எந்தக் காரணியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று வள்ளுவர் சொல்கிறார் தெரியுமா? எந்த ஒரு நாட்டில் பசுவின் பால் வளம் குறைகிறதோ, அந்தணர்கள் வேதம் ஓதவில்லையோ, ஆறு தொழில்களான ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் போன்ற தொழில்களைச் செய்யவில்லையோ அப்போது அந்த நாட்டின் மன்னன் முறை தவறி ஆட்சி செய்பவனாகத்தான் இருப்பான் என்கிறது கொடுங்கோண்மை அதிகாரத்தில் வரும் 10வது குறள் ”ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.”

  • திருக்குறள்

இந்த திருக்குறளில் முதல் காரணியாகவே ஆநிரை செல்வத்தை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்றால் தமிழர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாகவா இருக்க முடியுமா? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்கள், ஆதிதிராவிடர் சமுதாயத்தில் தோன்றிய திருவள்ளுவரை ’ஆரிய அடிமை திருவள்ளுவர்’ என்று பொதுக்கூட்டம் போட்டுத் திட்டினாலும் திட்டுவார்கள். ஏற்கனவே திருக்குறளைத் தங்கத் தட்டில் வைத்த மலம் என்று சொன்னவர் தானே இவர்கள் தந்தை ஈ.வே.ரா.! திருவள்ளுவர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த வழக்கங்களையும் சொற்களையும் வைத்து தானே திருக்குறளை எழுதியிருப்பார்? அரசியலுக்காக அல்லாமல் அறிவுக்காக தமிழ் படித்தவர்களுக்கு, ஆநிரை கவர்தல் என்ற மரபைப் பற்றித் தெரிந்து இருக்கும். பசுவைச் செல்வமாகக் கருதிய காரணத்தினால், அதைக் கவர்ந்து போரைத் தொடங்குவது தமிழ்நாட்டின் மரபு. சங்க இலக்கியங்களில் மாட்டிறைச்சியைத் தின்ற செய்தி காணப்பட்டாலும், இதை மாபாதகமாகக் கருதியது புறநானூறு. நன்றி கொல்லும் கொடுமையை விளக்கும் புறநானூற்றுப் பாடல், பசுவதை, சிசுக்கொலை, பிரம்மஹத்தி போன்ற குற்றங்களுக்குக் கூட கழுவாய் உண்டு, ஆனால் நன்று கொல்லும் குற்றத்திற்கு உய்வில்லை என்கிறது. ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும் மாண் இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என – புறநானூறு 34 வரி 1 – 6dravidar veeramani கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற குற்றத்திற்காக, மகாபாரதத்தில் தண்டனை கொடுக்கப்பட்ட செய்தி பதிவாகியுள்ளது. ஆக மொத்ததில், வேதங்களிலோ, இதிஹாசங்களிலோ, இந்த வியாபாரிகளால் மேற்கோள் காட்டப்படும் விவேகானந்தர், காஞ்சி பெரியவர் ஆகியோரின் எழுத்துகளிலோ மாட்டிறைச்சி தின்பது வழக்கம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை; மாறாக விலக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. தலித்துகளின் உணவு, தமிழர்களின் உணவு என்று கொக்கரிப்பவர்களும், வள்ளுவத்தின் வாழ்வியலைக் கடைபிடிக்கிறோம் என்று வள்ளுவ வியாபாரம் செய்பவர்களும், திருக்குறளில் விலக்கப்பட்டதும், புறநானூற்றில் மாபாதகமாகக் கருதப்படும் பசுவதையை ,தமிழர் மரபு என்று சொல்லி யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? தமிழ் மரபுக்கு எதிரான மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை விரைவில் தொடங்கப்போகிறோம் என்று SDPI அமைப்பின் தெகலான் பஹாவியுடன் அறைகூவல் விடும் வியாபார மணி, சிலரால் உணவாக உட்கொள்ளப்படும் பன்றிக் கறி தின்னும் போராட்டத்தை பஹாவி தலைமையில் மசூதிக்குள் நடத்துவாரா?  

கட்டுரை: பால.கௌதமன்

Convenor: Vedic Science Research Center  source: https://vsrc.in/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories