spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகம்யூனிஸ்ட்களின் தொடர் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? மாணிக் சர்க்கார் போன்ற எளிமை மனிதர்களும் தோற்கிறார்களே!

கம்யூனிஸ்ட்களின் தொடர் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? மாணிக் சர்க்கார் போன்ற எளிமை மனிதர்களும் தோற்கிறார்களே!

- Advertisement -

கம்யூனிஸ்ட் தொடர் வீழ்ச்சிக்கு என்ன காரணம் ????? மாணிக் சர்க்கார் போன்ற எளிமையான ஏழ்மையான மனிதர்கள் கூட தோல்வி அடைந்தது காரணம் என்ன???? பிஜேபி வெற்றி பெறுவதற்காக நாட்டின் பிரிவினைவாதிகளுடன் கூடக் கூட்டணி வைக்கத் தயங்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன மாரிதாஸ். {கேள்வி :இந்திரா , நியாஸ் , மோகன் ராஜ் இன்னும் சிலர்}

1957 களில் ஆரம்பித்து 1999வரையில் எந்த பொது தேர்தலில் எப்போதுமே கம்யூனிஸ்ட் குறைந்தது 10% வாக்குவங்கியைக் கையில் வைத்திருந்தது. மாநிலங்களைப் பொறுத்தவரை ஜோதிபாசு ஒரு 23வருடம் , புத்தாதேவ் பட்டாச்சாரி ஒரு 10வருடம் என்று தொடந்து 33வருடம் மேற்குவங்காளத்தை கோட்டையாக வைத்திருந்த கம்யூனிஸ்ட் எப்போதுமே சுமார் 40% வாக்கு வங்கியை அங்கே பெற்றுவந்தது. ஆனால் இன்று மேற்குவங்காளத்தில் வெறும் 19% வோட்டு கூட கிடையாது. தொடந்து வீழ்ச்சியைக் கண்டுவருகிறது. தமிழ் நாட்டில் நிலைமை மிக மோசம்.

ஏன்??? அதை விளக்கும் முன் முதலில் அனைவரும் ஒன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள் உலகத்தில் இன்று எதுவுமே கம்யுனிஸ்ட் நாடுகள் கிடையாது. பெயரளவில் தான் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை இறுக்கே தவிர உலக அளவில் 1940களில் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்த காலங்களில் இருந்த அந்தக் கம்யூனிச பொருளாதார கொள்கை இன்று கிடையாது.மிக எளிமையாகக் கூறினால் சீனா மிகத் தீவிர கம்யூனிஸ்ட் நாடு போல தெரியலாமே ஒழிய ஆனால் அங்கேயும் இன்றைய தேதியில் 80% நிறுவனங்கள் தனியார் மாயம் ஆக்கபட்டுவிட்டது. 1980களில் தனியார் மயம் ஆக்குவதைச் சீனா அறிவித்த நேரம் – மாவோ முன்வைத்த கம்யூனிஸ்ட் பொருளாதார கொள்கை தோல்வி என்பதை மறைமுகமாக ஒத்துக்கொள்ள பட்ட உண்மை.

ஏன்???

classless society உருவாகுவது தான் கம்யூனிஸ்ட் முதல் இலக்கு. அதற்கான வழிகளைத் தான் பொருளாதார பார்வையைக் முன்வைக்கிறார்கள். அதில் என்ன என்ன பிரச்சனை என்றால் (மிக எளிமையாக கூற முற்படுகிறேன் நேரம் கிடைக்கும் போது das kapital போன்ற புத்தகங்களை புரட்டவும்)

1.முதலில் அனைவர்க்கும் ஒரே ஊதியம் வழங்க முடியாது. சிலர் நன்கு வெளிபார்த்து அதிகம் நேரம் வேலை பார்த்து செல்வம் சேர்க்க விரும்புவான் – சிலர் ஊதாரியாக நீங்கள் என்ன சொன்னாலும் கடமைக்கு வேலைபார்த்து விட்டு சம்பளம் மட்டும் கேட்பார். இதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்குவது சுத்த முட்டாள் தனம். இன்னும் சொல்வதானால் அதிகம் நேரம் உழைக்கத் தயாராக உள்ளவனுக்குக் கட்டாயம் சலுகைகள் , ஊக்கதொகைகள் பதவி உயர்வுகள் கொடுக்கவேண்டும் அவனுக்கான வாய்ப்பை தடுக்கவும் கூடாது. இங்கேயே நம்மால் அனைவருக்கும் அனைத்தும் உரியது என்று ஆக்க முடியாது!!!

புதிய technology ஒன்று கண்டுபிடித்தால் உங்களுக்கு அது சந்தையில் வெற்றி கிடைத்தால் பெரும் லாபம் கிடைக்க வழி இருக்கும் என்பதால் தான் மேற்கத்திய நாடுகள் அறிவார்ந்த மனிதர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எடுத்துக் கொள்வர். அந்த அறிவாளிகளுக்கு பெரும் சன்மானமும் கிடைக்க வழி உண்டு. எனவே புதிய கண்டுபிடிப்புகள் ஆய்வுகள் தனியார் அதிகம் வேகம் காட்டுவர். ஆனால் அனைத்தும் அரசே நடத்தும் எல்லோருக்கும் ஒரே ஊதியம் என்று வரும் போது அங்கே எதற்கு கஷ்டபடனும்!!! ஆக புதிய புதிய கண்டுபிடிப்புகள் வேகம் பெறாது. அதனால் சமூக முன்னேற்றமும் கிடைக்காது.

(சில 1000கோடி முதலீட்டில் சில ஆர்வாளர்கள் மூலம் JIO நிறுவனம் 4G LTE Network வெளியிட்டு புதிய கண்டுபிடிப்பால் தான் மக்களுக்கும் குறைந்த விலையில் சேவை கிடைக்கிறது. அந்த நிறுவனம் அந்த புதிய யுக்திக்கு ஆய்வாளர்களுக்கு சில ஆயிரம் கோடி செலவு செய்வதால் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வேகம் பெறுகிறது. இது அடிப்படையில் ஒரு சமூகம் முன்னேற்றம் ஆக அவசியமானது.)

2.ஏற்றத்தாழ்வு இல்லாத அனைவருக்கும் அனைத்தும் சொந்தம் என்று கூறிவிட்டு – தன்னை எதிர்த்துக் கேட்பவர்களை அடக்குமுறையில் கொன்று குவித்தது கம்யூனிஸ்ட் தலைவர்கள்.மாவோ மட்டும் 3.8கோடி மக்களைக் கொலை செய்தார். உலகத்தில் உண்மையில் மற்ற எந்தச் சர்வாதிகாரிகளை விட அதிகம் கொலைகளை செய்த அனைவருமே கம்யூனிஸ்ட் தலைவர்கள் தான். ஏன் என்றால் தாங்கள் எண்ணுவது தான் சரி – அதற்கு மக்கள் அனைவரும் கேட்டு நடப்பது தான் கடமை என்று ஒருவித சர்வாதிகார போக்கு. உழைக்கும் வர்க்கத்தைக் காப்பாற்ற போராடினேன் பேர்வழி என்று உழைக்கும் வர்க்கத்தை பெரும் அளவுக் கொன்று குவித்ததும் இதே கம்யூனிஸ்ட் தலைவர்கள் தான்.

மக்கள் பேச்சுரிமை முழுமையாகப் பறித்ததும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சாதனை. போராட்டம் நடத்தி ஆட்சிக்கு வந்துவிட்ட பின் போராட்டங்கள் அனுமதி அளிக்க மாட்டார்கள். தொழிற்சங்கம் அமைத்து ஆட்சிக்கு வந்த பின் தங்களைத் தவிர யாரும் தொழில் சங்கம் நடத்தக் கூடாது என்று பேசுவர்.. பத்திரிகை மூலம் மக்களை உணர்வைத் தூண்டி ஆட்சிக்கு வந்த பின் பத்திரிகை தங்கள் கட்சி தவிர எவனும் நடத்தக் கூடாது என்று முடக்குவர்… இத்துலாம் சீனாவில் ரஷ்யாவில் வடகொரியா போன்ற நாடுகளில் இன்றும் தொடரும் விஷயம். (கொஞ்சம் மாறி இருக்கலாம் அவ்வளவு தான். ஆனால் இன்றும் சர்வதிகாரியாக தான் இருப்பர்.)

இந்த இரண்டு காரணங்களால் கம்யூனிஸ்ட் பெரும் நம்பிக்கை இன்மையை உலகம் முழுவதும் சம்பாரித்தது. இதனால் தான் தவறை சரிசெய்து சீனா தனியார் மயம் அனுமதியை ஆரம்பித்து வைத்து இன்று பெரும் வளர்ச்சியை கண்டு நிற்கிறது..

{பொதுவுடைமை என்ற எண்ணத்தின் நியாயம் புரிகிறது. ஆனால் அதை அடைய கம்யுனிசம் சொல்லும் பாதை பொருளாதார காரணங்களால் தவறானது.)

இந்தியாவில் தோல்வியை தழுவக் காரணம்???

அனைவர்க்கும் ஒரு உண்மையைக் கூறவிரும்புகிறேன். இந்தியாவில் ரவுடி கும்பல் யார் என்று நினைக்கிறீர்???? அரசையே மிரட்டி உருட்டி வாழும் கூட்டம் ஒன்று இங்கே இருக்கு அது யார் என்று நினைகிறீர்???? அவர்களை எவனும் கேள்வி கேட்க முடியாது தட்டி கேட்க முடியாது..

வேறு யாரும் இல்லை அரசு தொழில் சங்கங்கள் தான் அவை… இந்தியாவில் உள்ள தொழில் சங்கங்களில் உண்மையைக் கட்டாயம் அனைவரும் அறிந்தாக வேண்டும்..

AICCTU – All India Central Council of Trade Unions (Communist Party of India (Marxist-Leninist) Liberation)

AITUC – All India Trade Union Congress (Communist Party of India)

AIUTUC – All India United Trade Union Centre (Socialist Unity Centre of India (Communist))

இந்த மூன்று தொழில் சங்கங்களுமே கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ளவை. இவை தான் இந்தியாவில் உள்ள 90% அரசு ஊழியர்கள் கட்டுப்படுத்தும் சங்கங்கள்(தனியாரும் அடங்கும்). இவர்கள் மனது வைத்தால் எந்தப் போராட்டத்தையும் எப்போது வேண்டுமானாலும் நடத்த முடியும் எதையாது காரணம் சொல்லி… AICCTU என்ற தொழில் சங்கம் கீழ் மட்டும் பதிவான சங்கங்கள் சுமார் 228 தொழில் சங்கங்கள் உண்டு. நாடு முழுவதும்.. இவன் தான் ரவுடி நம்பர் ஒன்.

இதனால் என்ன தப்பு இருக்கு?????? வெறும் தொழில் சங்கங்கள் தானே மாரிதாஸ்????

அப்படி நீங்கள் நினைத்தால் மிகப் பெரிய தவறு… ஏன் என்றால் இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திரத்தைப் பெற்ற பின் பெரும் வளங்கள் எல்லாம் அரசு தன்னிடமே வைத்துக் கொண்டது. அதாவது தூர்தர்சன், BSNL, Railway , நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய் வளம் , துறைமுகங்கள் என்று அனைத்தையும் அரசு கையில் எடுத்தது. அனைத்தும் அரசு நடத்தும் என்று அறிவித்தது. சின்ன வளங்கள் எல்லாம் தனியார் நடத்த அனுமதி அளித்தனர் 1950களில். ஆடை தயாரிப்பு , கால் அணிகள் தயாரிப்பது என்று போன்றவை தனியார் நடத்த நாடு இயங்கியது.

ஆனால் ஒரு கட்டத்தில் நாடு இந்த அரசு ஊழியர்கள் கையில்சிக்கியது… உண்மையில் அரசு நடத்துவதாகக் கூறிய இந்த பெரும் வளங்களை எல்லாம் அடித்து தின்ற கூட்டம் இந்த அரசு ஊழியர்கள் அவர்கள் குடும்பம் தான். (அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று எவனாது கூறினால் அவனை விட இந்த நாட்டில் வெகுளி எவனும் கிடையாது. இந்த அரசு ஊழியர்கள் லட்சனம் தெரிந்துமா இன்னும் நம்புறேங்க இவனுகள. இலவச மருத்துவம் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கூறினால் நியாயம் இருக்கு. அத இந்த அரசு அரசு ஊழியர்கள் வச்சு நடத்தினா நாசம் தான் ஆகும்.)

விசயத்திற்கு வாருங்கள்:

இதனால் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களான HMT, BSNL, HAL என்று 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 90% தோல்வி நஷ்டம். காரணம் அரசு ஊழியர்கள் அந்த அளவுக்கு நேர்மையாக நாட்டுக்கு வேலை பார்த்த லட்சனம்.

ஆனால் இவர்கள் மீது எந்த நடவடிக்கையில் எடுக்க முடியாது – வேலையை விட்டு அனுப்பவும் முடியாத அளவு அரசை மிரட்டி வாங்கி வாங்கித் தின்ற கூட்டம் இந்தத் தொழில் சங்கங்கள் தான். BSNL லாபம் இல்லை நஷ்டம்… அதுவும் ஆண்டுக்கு 4000கோடி மக்கள் வரிப்பணத்தை கொண்டு நடத்தவேண்டும் என்று கேட்கும் அளவுக்குத் திமிர் பிடித்த கூட்டம் எந்தத் தொழில் சங்கங்கள். நஷ்டமும் ஆக்குவேன்… எனக்குச் சம்பளமும் கூடுதலாகத் தா என்று போராட்டமும் வருடம் வருடம் நடத்தினர் இந்தத் தொழில் சங்கங்கள்…

யோசிங்க :

வேலையும் ஒழுங்கா பார்க்க மாட்டேன். நாட்டுக்கு வரமானமும் கிடைக்க விட மாட்டேன்.. ஆனா மக்களிடம் வரி மூலம் காச வாங்கி எனக்கு என் குடும்பத்துக்கு சம்பளம் மட்டும் கூட்டி போடு இல்லை போராட்டம் நடத்துவேன். அரசை இயங்கவிடமாட்டோம். இந்த கேடு கேட்ட தொழில் சங்கங்கள் தான் முதல் காரணமும் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை வெறுக்க…

“நஷ்டம் ஆகும் நிறுவனத்தில் நீங்கள் யாரது சம்பளம் கூட தருவீர்களா???? ஆனால் இந்தத் தொழில் சங்கம் கேட்கும்… எப்படி????? அதான் அரசுக்கு வரி வருமானம் வருதே அத தாங்க. இல்லை லாபம் தர ONGC , GAIL போன்ற நிறுவனங்கள் கொடுக்கும் லாபத்தை எங்களுக்குத் தாங்க” என்று கூச்சம் இல்லாமல் பேசும் ஒரே கேவலமான மட்டமான அசிங்கமான அருவருப்பான கூட்டம் இந்தத் தொழில் சங்கம் என்று நடத்தும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவர்கள். இவங்க பேசுவதில் ஒரு சதவீத நியாயம் கூட இருக்கது.தமிழ் நாட்டில் பேருந்து ஊழியர்கள் சம்பளம் அதிகமா தரனும் என்றனர்… நஷ்டம் ஆகுதே என்றால் அத்துலாம் தரலாம் தாங்க என்று எதோ மாடு ஆடு வியாபாரம் போல பேசுவர் இந்தக் கூட்டம். இப்போது சம்பளம் உயர்த்திவிட்டு கட்டணத்தை உயத்தியது அரசு. வேற என்ன பண்ண முடியும்?????
(ஆனால் இதை மறைக்க நல்ல கண்ணு போன்றவரை முன்னிருத்து மறந்து கொள்வர் கம்யூனிஸ்ட் ஓநாய்கள்.}

இது மட்டுமா?????

இன்னும் இருக்கு… கம்யூனிஸ்ட் ஆட்சி செய்த மாநிலங்கள் பக்கம் எந்தத் தனியார் நிறுவனங்களும் செல்ல தயங்கின. காரணம் தொழில் சங்கம் , கம்யூனிஸ்ட் அரசு.சீனா ரஷ்யா போன்ற நாடுகளே தவறை திருத்தி இன்று சோசியலிசம் பேசி கொண்டிருக்க இவனு இன்னும் பழைய காரல்மார்க்ஸ் காலத்து தாஸ் கேப்பிடலே பிடிச்சு சுத்துறானுக!!! பின்ன எவன் தொழில் தொடங்க வருவான்.

கம்யூனிசம் என்பது ஒன்றும் தேவன் ஓதிய வேதம் அல்ல… அது நம் மனித குல மேன்பாட்டுக்கு நாம் உருவாகிய கொள்கை. அதில் தவறு இருக்கிறது என்னும் போது திருத்தி கொண்டு செயல்பட என்ன உங்களுக்கு கஷ்டம்!!!

ஒவ்வொரு மனிதனுக்கு உழைப்பு ஏற்ற ஊதியம் , வேலைவாய்ப்பு , அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரமான வாழ்வு,உணவு தேவை பூர்த்தி செய்வது , அமைதியான வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பது, அத்துடன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாத சமூகமாக ஒருவரை ஒருவர் மதிக்கும் சமூகமாக நாட்டை உருவாக வேண்டும். அவ்வளவு தான் அதற்காக தானே பொதுவுடைமை பேசினோம்… அதில் சித்தாந்த தோல்வி பொருளாதார தோல்வி என்னும் பொது மாற்றி கொண்டு நல்ல விஷயத்தை ஏற்று கொண்டு சென்றால் என்ன குறைந்து போவோம்!!!

தீவிர இடதுசாரி கொள்கையை இறுக்கி பிடித்த காரணத்தால் முதலீடுகள் கிடைக்காமல் வேலைவாய்ப்பே உருவாகாமல் போக மேற்குவங்காளம் , கேரளா , திரிபுர என்று அனைத்து மாநிலங்களும் பின்தங்கின. 1980களுக்கு பின்பது இந்த நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உலக பொருளாதாரம் புரிந்து கம்யூனிஸ்ட் சித்தாந்தம் செய்யும் தவற்றை புரிந்து தனியாருடன் இணைந்து மாநில வளர்ச்சிக்கு யோசித்திருக்க வேண்டும்… ஆனால் நான் கம்யூனிஸ்ட் என்று தீவிர இடதுசாரி பார்வையை தளர்த்தாது மிக மோசமான விஷயம்.

இன்று வரை கார்ப்பரேட் எதிர்ப்பு என்று பேசி திரியும் கம்யூனிஸ்ட் அறிவே கிடையாது.. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பொலிட் பீரோவில் தனியார் நிறுவனம் நடத்தும் பெரும் முதலாளிகள் வந்துவிட்டனர் என்ற விஷயம் கூடதேரியாத அறிவே இல்லாமல் கூட்டம் ஒன்று உண்டு இந்த நாட்டில்.( கொடுமை என்னவென்றால் பலருக்கு தாஸ் கேப்பிடல் தெரியாது.. கம்யூனிஸ்ட் பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியாது. சும்மா சே குவேரா படத்தை , பிடல் காஸ்ரோ படத்தை வைத்து தங்களை போராளிகள் போல அடையாளபடுத்தி கொள்கின்றனர். இந்த அரைகுறையாக திரியும் கம்யூனிசத் தொல்லை தான் பெரும் தொல்லை நாட்டில். Tshirt போட்டா கம்யூனிஸ்ட் என்று நினைத்துவிட்டான் பலர். எங்கே போய் முட்டி கொள்வது.. )

இறுதியாக :

மாணிக் சர்கார் அவர்கள் தோல்வி கிடைக்கவேண்டும், நல்லவர் தோற்க வேண்டும் என்பது போல ஊடகங்கள் வழக்கம் போல செய்தியை திரிக்க வேண்டாம். கம்யூனிஸ்ட் சித்தாந்தம் தோல்வி அடைந்தது என்று பேசவும். எங்களுக்கு மாணிக் சர்கார் அல்ல இலக்கு கம்யூனிஸ்ட். கடந்த 50வருடம் மேலாக தொழில் சங்கம் மூலம் நாட்டை குட்டிசொராக்கிய கம்யூனிஸ்ட் தோல்வியை தழுவ வேண்டும் அவ்வளவு தான்.

பிஜேபி பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்தது தான் வெற்றிக்கு காரணம். பிஜேபி ஒரு சந்தர்ப்பவாதா அரசியல் செய்கிறது என்ற குற்றசாட்டு????

பிஜேபி உண்மையில் எந்தப் பிரிவினைவாதிக்கும் இங்கே இடம் கொடுக்காது. பிஜேபி கட்சியை நீங்கள் கேலி செய்வதே கூட “ரெம்ப தேசப்பற்று இவர்களுக்கு மட்டும் தான் இருக்க.. பாரதத் தாய் இவர்களுக்கு மட்டும் தான் தாயா” என்று தான் கேலி செய்வர். அந்த அளவுக்கு இந்தத் தேசத்தை அதீதமாக நேசிக்கும் கட்சி பிஜேபி அதன் தொண்டர்கள். எனவே இந்த குற்றச்சாட்டு பொய்.

எப்படி என்றால்…

Indigenousn People’s Front Of Tripura என்ற கட்சியும், தனி நாடு கேட்டு போராடும் National Liberation Front of Tripura இரண்டும் வேறு. National Liberation Front of Tripura என்ற தீவிரவாத அமைப்புடன் பிஜேபி எந்தச் சமரசமும் செய்யாது. அதிகம் மலைவாழ் மக்கள் நியாயத்திற்குப் போராடும் Indigenousn People’s Front Of Tripura கட்சியுடன் கூட்டு சேர்வதில் என்ன தவறு இருக்கு???? அவர்கள் தேர்தலை சந்திக்க மாட்டோம் ஆயுதம் ஏந்துவோம் என்றா கூறுகிறார்கள்???? இல்லை தனி நாடா இப்போ கேட்கிறார்கள்???? அவர்கள் தனி மாநிலம் கேட்கிறார்கள்… தவிர தனி நாடு அல்ல…

உலக அளவில் ஆயுதம் ஏந்திய எந்த போராட்டக்காரர்களும் ஆதரவு அளிக்கக் கூடாது என்ற உலக நாடுகள் ஒப்பந்தம் கூறும்- அதே நேரம் போராளிகள் அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிவினையை விட்டுத் தேர்தல் அரசியலைக் கொண்டு தங்கள் உரிமைகளுக்கு ஜனநாயக ரீதியில் திரும்பினால் நாம் ஆதரிக்க வேண்டும் என்று ஐநா அமைப்பு கூறுகிறது. விடுதலைப் புலிகள் கூட ஆயுதங்களை விட்டுவிட்டுத் தேர்தல் அரசியலை நோக்கி நகரத் தான் உலக நாடுகள் கேட்டு கொண்டன, அதற்கு முயர்சியும் எடுத்தன. தொடர் ஆயுத ஏந்தல் என்றால் அழிப்பது தான் முடிவு வேறு வழியில்லை.அந்த வகையில் தனி நாடு கேட்காமல் தனிமாநில அதிகாரம் கேட்கும் IPFTகட்சியுடன் கூட்டு தவறே கிடையாது.. மலைவாழ் மக்கள் ஆதரவு தங்களுக்கு தான் உண்டு என்ற கம்யூனிஸ்ட் கூட்டத்தின் பொய் பிரச்சாரம் இதன் மூலம் முடிவுக்கு வருகிறது. 31% மலைவாழ் மக்கள் கொண்ட திரிபுராவில் இன்று பிஜேபி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

எனவே சும்மா திரும்பத் திரும்ப எப்படியது பொய் பரப்பாலாம்- இந்த தேர்தல் முடிவை ஏற்காமல் பிஜேபி மீது மக்களுக்கு எதிர்மறை எண்ணம் உருவாக்கலாம் என்ற இடதுசாரி ஊடகங்கள் , செய்தியாளர்கள் தங்கள் ஒப்பாரியை நிறுத்துக் கொண்டால் நலம். National Liberation Front of Tripura மட்டும் அல்லா காஷ்மீர் ஆரம்பித்துத் தனி நாடு கேட்டு எவன் இந்தியாவில் புரட்சி என்று கிளம்பினாலும் பிஜேபி அவர்களை அழித்து நாட்டை காப்பாற்றும். தவிர அவர்களுடன் சமரசம் செய்து நான் பார்த்ததே கிடையாது. காஷ்மீர் விவகாரம் தனி நாடு புரட்சி என்று திரிந்த அனைத்துப் போராளிகளையும் தீர்த்துக் கட்டியது இதே அரசுதான் என்பதை மறந்துவிட வேண்டாம்… 2014 முதல் திரிபுரா மேகாலயா சிக்கிம் நாகாலாந்து போன்றவற்றில் மாவோஸ்ட் நக்சளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி இன்று பலரை முடிவுக்குக் கொண்டுவந்ததும் பிஜேபி மோடி அரசு தான். ஆக கம்யூனிஸ்ட்

முதலில் எந்நேரமும் சம்பளம் போதவில்லை என்று போராட்டம் நடத்தும் முன்னர் ஒழுங்கா வேலையை பார்த்து அரசுக்கு கொஞ்சமாது நேர்மையாக நடக்க கூறுங்கள் உங்கள் தொழில் சங்கங்களை… ஆசிரியர் எல்லாம் போராட்டம் நடத்துவதை மக்கள் நிச்சயம் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

எனவே பிஜேபிக்கு எவனும் அதுவும் கம்யூனிஸ்ட் தேசபக்தியை சொல்லித் தரவேண்டாம். கிருஷ்ணமேனன் ஆரம்பித்து 1962 நாட்டுக்கு எதிராகச் சீனா போர் அறிவித்த பொது நீங்கள் காட்டிய தேசப்பற்றை உலகமே அறியும். எனவே கம்யூனிஸ்ட் ஊடகங்கள் , தலைவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு கொஞ்சமாது பொருளாதார மாற்றத்தை ஏற்கும் பக்குவர்த்திற்கு வாருங்கள்.

இல்லை என்றால் நிச்சயம் கேரளா பிஜேபி வசம் ஆகும்.. அதை எவனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

கட்டுரை: -மாரிதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe