காஷ்மீரில் பணயக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்! ஆபரேஷன் முடிந்துவிட்டது.

Published:

kasmir - 2026

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராம்பன் மாவட்டம் படோடா நகரில் வீட்டுக்குள் சென்று பதுங்கிய மூன்று தீவிரவாதிகள் வீட்டில் இருந்தவரை பணயக் கைதியாக பிடித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சில பகுதிகளில் ஊரடங்கு விலக்கிகொள்ளப்பட்டாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் உள்ளன.

ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மாநிலமும் தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது ஜம்மு காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜம்மு பகுதியில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் உள்ள படோடே நகரில் பொதுமக்கள் சென்ற பேருந்து ஒன்றை தீவிரவாதிகள் சிலர் வழிமறித்து நிறுத்த முயன்றனர்.

ஆனால் பேருந்தை நிறுத்த மறுத்த ஓட்டுனர், உடனடியாக பேருந்தை அங்கிருந்து வேகமாக ஓட்டிச்சென்றார். தீவிரவாதிகள் அதன்பிறகு வீடுகள் உள்ள பகுதிக்கு சென்ற பதுங்கி கொண்டனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து சென்று தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

ஆனால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதுடன் படோடே நகருக்குள் புகுந்தனர். பின்னர் அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கி கொண்டு அங்கிருந்தவரை பணைய கைதியாக பிடித்துக்கொண்டனர். இதனிடையே தீவிரவாதிகள் எந்த வீட்டில் உள்ளனர் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் இறங்கினர். கனமழை பெய்துவந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

எனினும் விடாமல் தீவிரமாக தேடிய ராணுவத்தினர் மூன்று தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதை அறிந்து சுற்றி வளைத்தனர். பின்னர் அதிரடியாக தாக்குதல் நடத்தி மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்த வைக்கப்பட்டவரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.மேலும் தீவிரவாதிகள் உள்ளனரா என்பது குறித்து தீவிரமாக போலீசார் அந்த பகுதியில் தேடி வருகின்றனர். இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்த ஏராளமான ஆயுதங்கள் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img