என்டிடிவி பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை

இந்தியா சற்றுமுன் வணிகம்

ndtv pranoy roy cbi - 2026

புது தில்லி:

என்டிடிவி., சி.இ.ஓ., மற்றும் இணை நிறுவுனர் பிரணாய் ராயின் தில்லியில் உள்ள வீட்டில் திங்கள் கிழமை இன்று காலை சிபிஐ சோதனை மேற்கொண்டது.

நிதி முறைகேடு, நிதியை மாற்றி அளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் என்டிடிவி ஈடுபட்ட விவகாரத்தில், இரு தினங்களுக்கு முன்னர் சிபிஐ சோதனை மேற்கொள்ளக் கூடும் என்று செய்திகள் பரவியிருந்தன.

முன்னதாக, ப்ரணாய் ராய் நடத்தி வரும் என்டிடிவி ப்ராஃபிட்ஸ் எனும் சேனல் ஜூன் 5 இன்று முதல் தன் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த சேனலுக்கு பார்வையாளர்கள் குறைந்ததும், சேனலுக்கான வருவாய் குறைந்து போனதும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

இருப்பினும் எண்டிடிவி 24×7 சேனலில் பங்குச் சந்தைகள் செயல்படும் பிரதான நேரத்தை ஒட்டி, வணிகச் செய்திகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், எண்டிடிவி ப்ராபிட்ஸ் சேனலுக்கான அனைத்து பொருளாதார ஒதுக்கீடுகளும் எண்டிடிவி ப்ரைம் சேனலுக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், எண்டிடிவி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக சில வருடங்களாகவே புகார்கள் தெரிவிக்கப் பட்டு வந்த நிலையில், இன்று சிபிஐ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

மேலும், ஐசிஐசிஐ வங்கியில் 48 கோடி ரூபாய் முறைகேடாக இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், ப்ரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.