கொரோனா: ரயிலிலே மூச்சு திணறி இறந்த பரிதாபம்! பீதியில் மக்கள்!

Published:

train 1 - 2026

ஓடும் ரயிலில் மூச்சுதிணறியே உயிரிழந்துவிட்டார் அந்த தொழிலாளி. இதையடுத்து அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்ததில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது பீகாரையே நடுங்க வைத்துள்ளது.

பீகார் மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காகரியா மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி, அரியானாவில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவருக்கு வயது 51. தற்போது வேலையின்மையால், சிறப்பு ரெயிலில் ஏறி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

காகரியா மாவட்டத்தில் உள்ள ரெயில்வே ஸ்டேஷனை நெருங்கியபோது அந்த தொழிலாளிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிட்டது. ஸ்டேஷனில் ரயில் வந்து நிற்பதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. உடனடியாக அவரது சடலமும் கீழே இறக்கப்பட்டு, கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அது டெஸ்ட்டுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அந்த ரயிலில் எத்தனை பேர் இவருடன் பயணித்தார்கள், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமா என தெரியவில்லை. இதையடுத்து, பீகாரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து வெளி மாநிலத்தில் சிக்கித் தவித்த தொழிலாளிகள் சொந்த ஊருக்கு செல்லும் வழியில். அதுவும் ரயிலிலேயே சிலர் உயிரிழந்து வருவது பெருத்த அதிர்ச்சி, சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img