ராணுவ வாகனம் டயர் வெடித்து விபத்து! இருவர் உயிரிழப்பு!

Published:

Jeep-acc

ராஜஸ்தானில் உள்ள பிகானேர்-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ராணுவ வாகனம் சென்றுள்ளது. அதில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சாலையில் வாகனம் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர்.

Jeep

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது, கர்னல் மனீஷ் சிங் சவுகான் மற்றும் மேஜர் நீரஜ் சர்மா ஆகிய இரு அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டப்போதும் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனையடுத்து அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுச்செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Related articles

Recent articles

spot_img