கணவன் வெளிநாட்டில்.. மனைவி புரிந்த காதல் திருமணம்!

Published:

love

கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூரில் இருந்த மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கழிப்பூர் மகராஜ் கஞ்ச் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கணவர் சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கு வேலை செய்து வருகிறார்.

இந்த சூழலில் அவரின் மனைவிக்கு வேறு இளைஞருடன் காதல் ஏற்பட்டது.

இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் தனது குழந்தையை மாமியார் வீட்டில் விட்ட அப்பெண் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இரு வீட்டாரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இதையடுத்து கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதியின் குடும்பத்தாருக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இதில் ஐந்து பேருக்கு இரத்தம் கொட்டிய நிலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், அதில் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img