மாமனாருடன் சென்ற மருமகள்! அதிர்ச்சியில் கணவர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
love
l

மாமனாருடன் தன் மூன்று வயது குழந்தையை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவியால் அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சியில் உள்ளார்.

ஹரியானாவில் பணிபத் சோனி என்ற காலனியில் வசித்து வந்த தம்பதி அப்துல் – ஆஸ்மா. இவர்களுக்கு மூன்று வயதில் மகளும் 10 வயதில் மகனும் உண்டு. தம்பதி இருவரும் அப்துலின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

ஒரு நாள் வீட்டில் உள்ளவர்கள் இரவு உணவு உண்டுவிட்டு அதிகாலையில் எழுந்த போது வீட்டில் ஆஸ்மாவும் அப்துலின் தந்தை சலீமும் காணாமல் போயுள்ளனர். இது குறித்து குடும்ப உறுப்பினர்கள் கடந்த 28ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாமனாரும் மருமகளும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டே இருப்பதாக கூறப்பட்டுள்ளது

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதிகாலை 4 மணியளவில் ஆஸ்மா வீட்டிற்கு வெளியே குழந்தையுடன் வருகிறார். அங்கிருந்த சலீம் இவர்களை கூட்டி கொண்டு செல்வது காமெராவில் பதிவாகியுள்ளது.

இதை அறிந்த கணவர் அப்துல் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருக்கும் போது இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால் அவர்களுக்கு இடையே இருந்த உறவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் பெரும் மன உளைச்சலில் உள்ளார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆஸ்மா மற்றும் சலீமை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.