சிலிண்டர் இன்று வருமா? கவலைப்படத் தேவையில்லை!

இந்தியா சற்றுமுன்
gas
gas

பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.

இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ் இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலிண்டர் முடிந்தவுடன் மக்கள் புக் செய்தால் ஒரு சில டீலர்களிடமிருந்து சிலிண்டர் வருவதற்கு வாரக்கணக்கில் ஆகிவிடுகின்றது. இதனால் அந்த சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்குவதற்காக தற்போது புதிய வசதி ஒன்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது முன்பு போல ஒரு விநியோகஸ்தர்களிடம் மட்டுமே சிலிண்டர்களை நிரப்பாமல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மூன்று விநியோகஸ்தர்களிடம் இருந்து மக்கள் சிலிண்டர் நிரப்பிக்கொள்ளலாம் என்றும்,

நிறுவனத்தில் சிலிண்டரை முன்பதிவு செய்து அது உடனே வராமல் இருந்தால் வாடிக்கையாளர்கள் வேறொரு நிறுவனத்தில் சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கலாம். எந்த சிலிண்டர் முதலில் வருகிறதோ அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.