விவசாயிகள் நிதிஉதவி திட்டம்: 8வது தவணை.. இன்று வழங்கும் பிரதமர்!

இந்தியா சற்றுமுன்
pm former found
pm former found

விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டப்படி, நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை, 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது.

இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கோடி செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

9 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில் 19 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சில பயனாளிகளுடன் பிரதமர் உரையாடுகிறார். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமரும் கலந்து கொள்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.