மணமகளின் மாமாவை சுட்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணமகள்!

gun
gun

திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் பெண்ணின் உறவினர் காயமடைந்ததால் மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்த, மணமகனின் காரை அடித்து நொறுக்கியதுடன் அவரின் உறவினர்களை அடித்து விரட்டி பெண் வீட்டார் சிறைபிடித்த சம்பவத்தால் திருமண வீடு கலவர வீடாக மாறியது.

இந்தியாவில் தற்போது திருமண சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் திருமணங்கள் என்பது தற்போது சினிமாக்களை மிஞ்சும் வகையில் சஸ்பென்ஸ், த்ரில்லர், அதிரடி ஆக்‌ஷன் கொண்டதாக மாறிவிட்டன. கடைசி நேரங்களில் திருமணங்களை நிறுத்தி மணப்பெண்கள் அதிர வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆனால், தற்போது அதையும் தாண்டி திருமண வீடு ஒன்று கலவர வீடாக மாறியிருக்கும் சம்பவத்தை வைத்து புதிதாக ஒரு சினிமா படமே எடுத்துவிடலாம் என்ற வகையில் அமைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த புதன் கிழமை இரவு 22 வயதான இராம் என்ற பெண்ணுக்கும், ஷாசத் என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. வட மாநிலங்களில் திருமண நிகழ்வின் போது துப்பாக்கிசூடு நடத்துவது பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த திருமணத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்திய மணமகன் வீட்டார் உற்சாகமாக இருந்துள்ளனர். இதில் தவறுதலாக மணமகளின் மாமாவுக்கு குண்டு காயம் ஏற்பட்டு விட்டது. அவர் ரத்த காயங்களுடன் சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இதனையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என மணப்பெண் அறிவித்தார். ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னிலையிலும் மணமகனின் குடும்பத்தினர் இது போன்று நடந்து கொண்டால், நான் திருமணம் முடிந்து அவர்களின் வீட்டுக்கு சென்று அங்கு தனியாக இருக்கும் நேரத்தில் அக்குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்வார்கள்? என்னால் எப்படி இந்த திருமணத்தை செய்ய முடியும் என மணப்பெண் கேள்வி எழுப்பினார்.

மணமகளின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், வெகுண்டெழுந்த அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மணமகனின் காரை சூறையாடினர். அவரின் உறவினர்களை அடித்து தாக்கியதுடன் அவர்கள் அனைவரையும் சிறைபிடித்து வைத்திருந்தனர். அந்த திருமண வீடே கலவர வீடாக காட்சியளித்தது.

பின்னர் தகவலறிந்து காவல்துறையினர் அங்கு வந்த பின்னரே சிறைபிடிக்கப்பட்ட மணமகன் வீட்டார் விடுவிக்கப்பட்டு நிலைமையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மணமகளின் மாமாவை துப்பாக்கியால் சுட்டதாக மணமகன் ஷாசத், அவருடைய சகோதரர்கள் பப்பு, சனு ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது உரிமம் பெற்ற துப்பாக்கியா எனவும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories